பூத் சிலிப் விநியோகம் தாமதம் வாக்காளர்கள் குழப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூத் சிலிப் விநியோகம் தாமதம் வாக்காளர்கள் குழப்பம்

Added : ஏப் 06, 2021
Share
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பூத் சிலிப் தாமதமாக வழங்கியதால் எந்த ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டளிப்பது என வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 21 லட்சத்து 47 ஆயிரத்து 295 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) கடந்த 3 நாட்களுக்கு முன் தாமதமாக விநியோகிக்கும் பணி

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் பூத் சிலிப் தாமதமாக வழங்கியதால் எந்த ஓட்டுச்சாவடி மையத்தில் ஓட்டளிப்பது என வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 21 லட்சத்து 47 ஆயிரத்து 295 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.வாக்காளர் சீட்டு (பூத் சிலிப்) கடந்த 3 நாட்களுக்கு முன் தாமதமாக விநியோகிக்கும் பணி துவங்கியது.இதனால், பெரும்பாலான வாக்காளர்களுக்கு பூத் சிலிப் கிடைக்கவில்லை. எந்த மையத்தில் ஓட்டளிப்பது என வாக்காளர் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னையில் அச்சிட்டு தொகுதி வாரியாக பூத் சிலிப்பை படிப்படியாக அனுப்பியது. இதன் காரணமாக பூத் சிலிப் வினியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் பூத் சிலிப் பெறாதவர்கள் அந்தந்த ஓட்டுச்சாவடி மையங்களில் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X