வாழை மர தோரணங்களுடன் மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழை மர தோரணங்களுடன் மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைப்பு

Added : ஏப் 06, 2021
Share
சிதம்பரம்; சிதம்பரம் தொகுதியில் இரண்டு இடங்களில் வாழை மரம், தோரணங்கள் கட்டி மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒரு வகையாக தோரணங்கள் கட்டி மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் தொகுதியில், சிதம்பரம் வடக்கு வீதி, நகராட்சி
 வாழை மர தோரணங்களுடன் மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைப்பு

சிதம்பரம்; சிதம்பரம் தொகுதியில் இரண்டு இடங்களில் வாழை மரம், தோரணங்கள் கட்டி மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அதில் ஒரு வகையாக தோரணங்கள் கட்டி மாதிரி ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.சிதம்பரம் தொகுதியில், சிதம்பரம் வடக்கு வீதி, நகராட்சி நடுநிலைப் பள்ளி, பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரண்டு இடங்களில் மாதிரி ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஓட்டுச்சாவடிகளில் புதிய வர்ணம் பூசப்பட்டு, முகப்பில் வாழை மரம் தோரணம் மற்றும் வண்ண பலுான்கள் கட்டி, கைகூப்பிய வரவேற்பு பொம்மைகள் வைத்து, வண்ண தரை விரிப்பு போடப்பட்டுள்ளது. இது வாக்காளர்களை கவர்ந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X