பொது செய்தி

தமிழ்நாடு

சென்னைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்கம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கடலுார்; சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிக்க வசதியாக கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 129 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.தமிழக சட்டசபை தேர்தல் இன்று 6ம் தேதி நடக்கிறது. 100 சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. குறிப்பாக, வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்வோர் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டளிக்க

கடலுார்; சட்டசபை தேர்தலில் பொதுமக்கள் ஓட்டளிக்க வசதியாக கடலுார் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 129 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.தமிழக சட்டசபை தேர்தல் இன்று 6ம் தேதி நடக்கிறது. 100 சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. குறிப்பாக, வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்வோர் சொந்த ஊருக்குச் சென்று ஓட்டளிக்க வசதியாக சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.அதன்படி கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட 11 பணிமனைகளில் இருந்து சென்னைக்கு தினசரி 240 பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தலையொட்டி, கூடுதலாக 129 பஸ்கள் நேற்று முன்தினம் முதல் வரும் 8ம் தேதி வரை இயக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X