முத்தியால்பேட்டை - துறைமுகம் தொகுதியில் நேற்று, பா.ஜ., பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.துறைமுகம் சட்டசபை தொகுதியில், தி.மு.க., -- பா.ஜ., என, இருமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.இங்கு, பா.ஜ., -- தி.மு.க., வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, தொடர் மோதல் நடந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி, ஒருவர் மீது ஒருவர், காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், நேற்று பணப் பட்டுவாடாவை தடுக்க, தொகுதி முழுதும், இரு கட்சி நிர்வாகிகளும் சுற்றி வந்தனர்.அப்போது, முத்தியால்பேட்டை, சைவ முத்தையா தெருவைச் சேர்ந்த, பா.ஜ., பிரமுகரான சரத்குமார், 26, என்பவர், மண்ணடி, அப்பாராவ் கார்டன் வழியாக நடந்து சென்றார்.அவ்வழியே, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர், சரத்குமார் கையை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.படுகாயமடைந்த சரத்குமாரை, அக்கம் பக்கத்தினர் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE