பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரியத்தில் கொரோனா தடுப்பூசி

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை - மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.சென்னை, அண்ணா சாலையில், மின் வளாகம் உள்ளது. அங்கு, மின்வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன. அவற்றில், 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அதனால்

சென்னை - மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.சென்னை, அண்ணா சாலையில், மின் வளாகம் உள்ளது. அங்கு, மின்வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன. அவற்றில், 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர். கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அதனால் மின்வாரிய ஊழியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தலைமை பொறியாளர் மல்லிகா, மாரடைப்பால் உயிரிழந்தார்.இதையடுத்து, மின் வளாகத்தில் உள்ள மருத்துவமனையில், அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளுக்கும், மின் வாரியம் சார்பில், இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது. பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X