ஏ.டி.எம்., சேவை பிரச்னை பணம் எடுப்பதில் சிக்கல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை- சென்னையில், பல்வேறு இடங்களில் உள்ள, ஏ.டி.எம்., இயந்திரங்கள் வேலை செய்யாததால், பணம் எடுக்க முடியாமல், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள், சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வங்கிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் இந்த மையங்களில், பணம் செலுத்துதல், எடுத்தல்,

சென்னை- சென்னையில், பல்வேறு இடங்களில் உள்ள, ஏ.டி.எம்., இயந்திரங்கள் வேலை செய்யாததால், பணம் எடுக்க முடியாமல், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்கள், சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வங்கிக்கு வருவதை தவிர்க்கும் வகையில் இந்த மையங்களில், பணம் செலுத்துதல், எடுத்தல், 'பாஸ்புக் என்ட்ரி' உள்ளிட்ட பல சேவைகள், இங்குள்ள இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னையில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள, ஏ.டி.எம்.,இயந்திரங்களில் பணம் எடுக்க முடியாததால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதத்தின் முதல் வாரம் என்பதால், பலரும் தங்கள் சம்பள பணத்தை எடுக்க முயற்சிக்கும் நிலையில், பல ஏ.டி.எம்., களில் பணம் இல்லை என்ற செய்தி வருவதால், தங்கள் சொந்த பணத்தையே எடுக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கி, ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றாலும், பிற மையத்திற்கு சென்றாலும், பணம் எடுக்க முடியவில்லை.கார்டு பயன்படுத்தி, ரகசிய எண் பதிவு செய்து, தொகை குறிப்பிட்டதும், கடைசி நேரத்தில், சேவை துண்டிக்கப்பட்டதாக திரையில் தோன்றுகிறது.இது போன்ற சேவை தடை, எஸ்.பி.ஐ., இந்தியன் வங்கி, கனரா வங்கி என, அனைத்து ஏ.டிஎம்., மையங்களிலும் நிலவுகிறது. இதனால், பணம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.தேர்தல் நேரம் என்பதால், ஏ.டி.எம்., மையங்களில் நிரப்ப கொண்டு வரப்படும் பணம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதால், பல ஏ.டி.எம்.,கள் பணம் இன்றி காலியாக உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஓட்டுப்பதிவு முடிந்த பின், நிலைமை சீராக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X