பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் 'பெயின்டர்' பலி மனைவிக்கு இழப்பீடு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை - விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு, 23.67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 26; பெயின்டர். 2018 டிசம்பரில், புதுார் - பள்ளிப்பட்டு சாலையில் பைக்கில் சென்ற போது, அதிவேகமாக வந்த மகேந்திரா 'வேன்' இவர் 'பைக்' மீது மோதியது. பலத்த காயமடைந்த

சென்னை - விபத்தில் இறந்தவரின் மனைவிக்கு, 23.67 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 26; பெயின்டர். 2018 டிசம்பரில், புதுார் - பள்ளிப்பட்டு சாலையில் பைக்கில் சென்ற போது, அதிவேகமாக வந்த மகேந்திரா 'வேன்' இவர் 'பைக்' மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.தன் கணவர் இறப்புக்கு, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, ஜனார்த்தனனின் மனைவி குமுதா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி பி.ரேவதி முன் நடந்தது. இதில், மனுதாரர் கணவர் இறப்புக்கு, வேனை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு 23.67 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், 'தி ஓரியண்டல் இன்சூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X