பொது செய்தி

தமிழ்நாடு

கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை ஓட்டளிக்க ஊருக்கு புறப்பட்ட வியாபாரிகள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை- தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டளிப்பதற்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது.இந்நிலையில், தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய,

சென்னை- தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஓட்டளிப்பதற்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.தமிழக சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது.இந்நிலையில், தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளிக்கும் வகையில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று பகல், 11 மணி வரை காய்கறிகள், பழங்கள் விற்பனை களைக்கட்டியது. வியாபாரம் முடிந்ததும், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து சரக்குகளை ஏற்றி வந்த வாகனங்களில், கூலித் தொழிலாளர்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X