பொது செய்தி

தமிழ்நாடு

வேளச்சேரி, சைதாப்பேட்டையில் தயார் நிலையில் ஓட்டுச்சாவடிகள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
வேளச்சேரி - வேளச்சேரி சட்டசபை தொகுதி, 175 முதல், 182 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, 3.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 12 ஆயிரத்து, 142 பேர், 80 வயதுக்கு மேற்பட்டோர்; மாற்றுத்திறனாளிகள், 439 பேர்; திருநங்கையர், 94 பேர்.மொத்தம், 261 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கொரோனா பாதிப்பால், 459 ஓட்டுச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அசம்பாவிதங்களை தடுக்க, 239 சாவடிகளில், வெப் கேமரா அமைக்கப்பட்டு உள்ளது.

வேளச்சேரி - வேளச்சேரி சட்டசபை தொகுதி, 175 முதல், 182 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, 3.14 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 12 ஆயிரத்து, 142 பேர், 80 வயதுக்கு மேற்பட்டோர்; மாற்றுத்திறனாளிகள், 439 பேர்; திருநங்கையர், 94 பேர்.மொத்தம், 261 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கொரோனா பாதிப்பால், 459 ஓட்டுச்சாவடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அசம்பாவிதங்களை தடுக்க, 239 சாவடிகளில், வெப் கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், திருவான்மியூர், மாநகராட்சி பள்ளியில் பாதுகாக்கப்பட்டது.நேற்று மாலை, மின்னணு இயந்திரங்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.சைதாப்பேட்டை தொகுதி, 139, 140, 142 மற்றும் 170 முதல் 174 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, 2.78 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6,532 பேர், 80 வயதுக்கும் மேற்பட்டோர்; மாற்றுத்திறனாளிகள், 495 பேர்; திருநங்கையர், 75 பேர்.மொத்தம், 257 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. கொரோனாவால், 400 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.குறிப்பிட்ட ஓட்டுச்சாவடிகளில், 198 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.நந்தனம் அரசு கலைக்கல்லுாரியில் பாதுகாக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நேற்று மாலை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.இரு தொகுதிகளில், ஓட்டுப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் அண்ணா பல்கலையில் பாதுகாக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X