ஓட்டளிப்பவர்களுக்கு பரிசு சமூக ஆர்வலர் குழு அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டளிப்பவர்களுக்கு பரிசு சமூக ஆர்வலர் குழு அறிவிப்பு

Added : ஏப் 06, 2021
Share
தாம்பரம் - சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம், பல்வேறு விதங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தாம்பரம் தொகுதிக்குட்பட்ட, சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று, ஓட்டளிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என, அறிவித்து உள்ளது.இது குறித்து, குழுவினர் கூறியதாவது:ஜனநாயகத்தின் வலிமையை நிலைநாட்ட, வாக்காளர்கள் அனைவரும்

தாம்பரம் - சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம், பல்வேறு விதங்களில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், தாம்பரம் தொகுதிக்குட்பட்ட, சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று, ஓட்டளிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என, அறிவித்து உள்ளது.இது குறித்து, குழுவினர் கூறியதாவது:ஜனநாயகத்தின் வலிமையை நிலைநாட்ட, வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.தாம்பரம் தொகுதி வாக்காளர்கள், இன்று, ஓட்டு பதிவு செய்துவிட்டு வந்து, விரலில் வைக்கப்பட்ட மையுடன் புகைப்படம் எடுத்து, 'முகநுால், இன்ஸ்டாகிராம்' ஆகியவற்றில், #TambaramVotes100% என்ற, 'ஹேஷ்டேக்'ல் பதிவிட்டால் அவர்களில், முதலில் பதிவிடும், 10 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.வாக்காளர்கள் கட்சி பேதமின்றி, யாருக்கு வேண்டுமானாலும், தங்கள் ஓட்டுக்களை பதிவிடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X