ஆலந்துார் - ஆலந்துார் தொகுதியிலுள்ள சில ஓட்டுச்சாவடிகள், அடிப்படை வசதிகள் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன.சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, இன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை நடக்கிறது.இதையொட்டி, தேர்தல் ஆணையம் சார்பில், ஓட்டுச்சாவடிகளில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பதற்கு வசதியாக, சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பந்தல், தண்ணீர் வசதி, கழிப்பறைக்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆனால், ஆலந்துார் தொகுதி, எம்.கே.என்., சாலை ஆரம்ப பள்ளி ஒன்றில் உள்ள ஓட்டுச்சாவடிகள், மிகவும் குறுகலாக அமைக்கப்பட்டுள்ளன. இதே போல, மேலும், சில இடங்களிலும், குறுகலான அறையே அமைக்கப்பட்டுள்ளன.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சிறிய அறைகளில் வாக்காளர்கள், தேர்தல் நடத்துபவர்கள் இருந்தால், தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், கொரோனா தொற்றை தடுக்க, கிருமி நாசினி தெளிக்கவும், நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE