சொந்த ஊர் சென்ற மக்கள் சுங்கச்சாவடிகளில் நெரிசல்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
சென்னை - சென்னையில் இருந்து சென்றவர்களால், சுங்கச்சாவடிகளில் வாகன நடமாட்டம் நேற்று திடீரென அதிகரித்தது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அலுவலக பணி மற்றும் தொழில் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இன்று சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கஉள்ள நிலையில், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக, பலரும் சொந்த ஊர்களுக்கு

சென்னை - சென்னையில் இருந்து சென்றவர்களால், சுங்கச்சாவடிகளில் வாகன நடமாட்டம் நேற்று திடீரென அதிகரித்தது.பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், அலுவலக பணி மற்றும் தொழில் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். இன்று சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கஉள்ள நிலையில், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றுவதற்காக, பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் செல்வதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆம்னி பஸ்களும் அதிகளவில் இயக்கப்பட்டன. இதுமட்டுமின்றி, பலரும் தங்களது கார்கள், மினி சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், சென்னை புறவழி சாலையில் உள்ள சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் வாகன நடமாட்டம் கணிசமாக அதிகரித்தது. இதேபோல, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதுார், சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லுார் சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் நடமாட்டம் அதிகரித்தது. பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டதால், பெரிய அளவில் இங்கு போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X