பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போட்டுக்கொள்ள முதியோர் 'தவம்'

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குரோம்பேட்டை - குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட வருபவர்கள், மணி கணக்கில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.குரோம்பேட்டையில், அரசு மருத்துவமனை இயங்குகிறது. இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும். அதனால், 30 கி.மீ., சுற்றளவில் இருந்து, நாள்தோறும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.தற்போது, அரசு மருத்துவமனை மற்றும்

குரோம்பேட்டை - குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட வருபவர்கள், மணி கணக்கில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.குரோம்பேட்டையில், அரசு மருத்துவமனை இயங்குகிறது. இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும். அதனால், 30 கி.மீ., சுற்றளவில் இருந்து, நாள்தோறும், ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.தற்போது, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கொரோனா தடுப்பூசி போடுவதால், இம்மருத்துவமனைக்கு, பல்வேறு இடங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கானோர், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக, நாள்தோறும் வந்து செல்கின்றனர்.நேற்று காலை, வழக்கம் போல், ஏராளமான முதியவர்கள் தடுப்பூசி போடுவதற்காக வந்தனர். அப்போது, தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதாக கூறப்பட்டதாக தெரிகிறது.அதனால், பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. கூட்டத்தையும், நீண்ட நேரம் காத்திருப்பதையும் பார்த்து, சிலர் திரும்பி சென்றனர். பலர், காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.மேலும், ஒரு செவிலியர் மட்டுமே தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அதேபோல், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் விபரங்களை, குறிப்பு எழுதுவதற்கும் ஒருவர் மட்டுமே இருந்தார். நீண்ட நேரம் காத்திருப்பதற்கு, இதுவும் ஒரு காரணமாகும். ஒரு பெரிய மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பதும், குறைந்த ஊழியர்கள் இருப்பது என்பதும், முதியவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெரிய மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது ஏற்புடையதல்ல. மருத்துவமனை நிர்வாகம், இத்தகவலை தெரிவிக்காததால், தடுப்பூசி போட வருபவர்கள், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. முறையாக தகவல் தெரிவித்தால், அதற்கு ஏற்ப, மக்கள் வருவர். இனி வரும் காலங்களில், இதை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.சமூக ஆர்வலர்கள்கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. ஒவ்வொரு நாளும், எத்தனை பேர் வருகின்றனரோ, அத்தனை பேருக்கும், தடுப்பூசி போடப்படுகிறது. நேற்று மட்டும், 390 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டு செவிலியர், குறிப்பு எழுதுவதற்கு இரண்டு பேர் என, பணியில் உள்ளனர். சில நேரங்களில் கூட்டம் அதிகமாவது என்பது, இயல்பான ஒன்று.மருத்துவமனை நிர்வாகம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
06-ஏப்-202116:15:51 IST Report Abuse
a natanasabapathy பெங்களூரு வில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் தடுப்பூசி போட அருமையாக ஏற்பாடு செய்துள்ளனர். அனைத்தும் கணினி மயம்.ஆதார் பரிசீலனை செய்து பணம் பெற்று ரசீது வழங்குவது வரை கணினி மயம் தான். ஊசி போடுவதற்கு irandu seviliyarkal என moththam 8 uzhiyarkal velai seythanar usi pottukondatharkkaana Aththaatchiyayum கம்ப்யூட்டர் moolamaaka Koduththu vittaarkal. Munpathivu அவசியம் Attai mobile moolamaaka seythu கொள்ளலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X