தமிழக ஆந்திர எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை| Dinamalar

தமிழ்நாடு

தமிழக ஆந்திர எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை

Added : ஏப் 06, 2021
Share
ஊத்துக்கோட்டை- தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தமிழக-- ஆந்திர எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வாகனங்களைதீவிர சோதனை செய்துஅனுப்பி வைக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதி தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையொட்டி, மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, திருத்தணி,
 தமிழக ஆந்திர எல்லையில் பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை

ஊத்துக்கோட்டை- தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தமிழக-- ஆந்திர எல்லையில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வாகனங்களைதீவிர சோதனை செய்துஅனுப்பி வைக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதி தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி, இன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையொட்டி, மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகள், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.சட்டசபை தேர்தலையொட்டி, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில், தமிழக போலீசாரும்இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.ஊத்துக்கோட்டையில் இருந்து, சத்தியவேடு மற்றும் திருப்பதி செல்லும் இரண்டு வழிகளில், தமிழக போலீஸ், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் வருவாய்த் துறையினர், அவ்வழியே செல்லும் கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிர,சோதனைக்குப் பின்அனுப்பி வைக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X