ஓட்டு போட தமிழகத்திற்கு செல்லும் தொழிலாளர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு போட தமிழகத்திற்கு செல்லும் தொழிலாளர்கள்

Added : ஏப் 06, 2021
Share
நகரி- தமிழகத்தில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி, ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள் ஓட்டு போடுவதற்கு தமிழகத்திற்கு புறப்பட்டனர்.தமிழகத்தின் எல்லைப்பகுதி மாவட்டமான சித்துார் மாவட்டத்தில், ரேணிகுண்டா, திருப்பதி, காளஹஸ்தி, புத்துார், நகரி மற்றும் சித்துார் போன்ற முக்கிய நகரங்களில், தமிழகத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள்,

நகரி- தமிழகத்தில் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுவதையொட்டி, ஆந்திர மாநிலத்தில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்கள் ஓட்டு போடுவதற்கு தமிழகத்திற்கு புறப்பட்டனர்.

தமிழகத்தின் எல்லைப்பகுதி மாவட்டமான சித்துார் மாவட்டத்தில், ரேணிகுண்டா, திருப்பதி, காளஹஸ்தி, புத்துார், நகரி மற்றும் சித்துார் போன்ற முக்கிய நகரங்களில், தமிழகத்தை சேர்ந்த நுாற்றுக்கணக்கான கூலித் தொழிலாளர்கள், விசைத்தறி, ஓட்டல், மளிகை கடைகள், குவாரிகள், செங்கல் சூளைகள் போன்ற பல்வேறு தொழில் சார்ந்த இடங்களில், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.இவர்களுக்கு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் தமிழகத்தில் உள்ளதால், இவர்கள் நேற்று காலை முதல், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், விழுப்புரம் மற்றும் சென்னை நோக்கி தங்களின் இருப்பிடத்திற்கு புறப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்று நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக செல்வதாக கூறினர்.இது குறித்து நகரியில் இருந்து, தமிழகத்திற்கு பஸ் மூலம் செல்லும் கூலித் தொழிலாளர்களிடம் விசாரித்த போது, 'எங்கள் குடும்பத்தினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் இருந்து ஓட்டு போடுவதற்கு அழைப்பு வந்துள்ளது. 'ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் ஜனநாயக கடமையை ஆற்ற தங்களது சொந்த கிராமத்திற்கு செல்கிறோம்' என, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X