பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் 178 கேமரா மூலம் கண்காணிப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
திருவள்ளூர்; ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் தனியார் கல்லுாரி வளாகத்தில், 178 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பெருமாள்பட்டு தனியார் கல்லுாரி வளாகத்தில் எண்ணப்பட உள்ளன.ஓட்டுப்பதிவு மையத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணியை,அனைத்து

திருவள்ளூர்; ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் தனியார் கல்லுாரி வளாகத்தில், 178 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், பெருமாள்பட்டு தனியார் கல்லுாரி வளாகத்தில் எண்ணப்பட உள்ளன.ஓட்டுப்பதிவு மையத்தில் நடைபெறும் முன்னேற்பாடு பணியை,அனைத்து தேர்தல்பார்வையாளர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பொன்னையா நேரில் பார்வையிட்டார்.பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில் பதிவாகும் மின்னணு இயந்திரங்கள், 349 மண்டல குழு வாயிலாக, பாதுகாப்பாக எடுத்து வரநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு, ஒரு மையம்; திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மையம்.அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய, நான்கு தொகுதிகளுக்கு ஒரு மையம் என, மூன்று மையங்களாக பிரித்து ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இம்மூன்று மையங்களில், 178 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகளில்கண்காணிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.உடன், எஸ்.பி., அரவிந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X