சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை கொன்ற இருவர் கைது

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கூடுவாஞ்சேரி; கூடுவாஞ்சேரியில், வாலிபரை கொலை செய்த இருவரை, போலீசார், நேற்று, கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் நாராயணன், 39. தனியார் நிறுவனத்தில், டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, மனைவி அம்மு, 35, மகள்கள் தர்ஷினி, 7, ஹர்ஷினி, 4, ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், கூடுவாஞ்சேரி - தைலாவரம் இடையே,

கூடுவாஞ்சேரி; கூடுவாஞ்சேரியில், வாலிபரை கொலை செய்த இருவரை, போலீசார், நேற்று, கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி மகன் நாராயணன், 39. தனியார் நிறுவனத்தில், டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, மனைவி அம்மு, 35, மகள்கள் தர்ஷினி, 7, ஹர்ஷினி, 4, ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், கூடுவாஞ்சேரி - தைலாவரம் இடையே, ரயில்வே இருப்பு பாதையில், நேற்று முன்தினம், நாராயணனை, சரமாரியாக வெட்டி கொலை செய்து, மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், காரணைபுதுச்சேரி வெங்கட்ராமன், 34, பெருமாட்டுநல்லுார் கோபிநாத், 22, ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில், நேற்று அடைத்தனர்.போலீசாரிடம், வெங்கட்ராமன் அளித்த வாக்குமூலம்:நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறேன். நாராயணன் நெருங்கிய நண்பர். அவருக்கு, குடிபழக்கம் இருப்பதால், அடிக்கடி அவரது வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது, நாராயணன் மனைவி அம்முக்கும், எனக்கும், கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால், நாராயணனுக்கும், எனக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.கூடுவாஞ்சேரியில் மது அருந்த, நாராயணன், நேற்று முன்தினம், என்னை அழைத்தார். அங்கு, நண்பருடன் சென்றேன். அங்கு மது அருந்தியபோது, எனக்கும், நாராயணனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த நான், நண்பருடன் சேர்ந்து, அவரை கத்தியால் வெட்டி கொலை செய்து, ரயில்வே இருப்பு பாதையில் வீசி சென்றேன்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X