பொது செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., சார்பில் டோக்கன்: வாக்காளர்கள் வாங்க மறுப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில், அ.ம.மு.க., சார்பில் வழங்கப்பட்ட டோக்கனை, வாக்காளர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும், முக்கிய கட்சிகள், அவரவர் பங்குக்கு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து முடித்து விட்டனர். இதில், ஒரு சில இடங்களில், பணம் கொடுக்கும்போது, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் பிடிபட்டனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர்

காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில், அ.ம.மு.க., சார்பில் வழங்கப்பட்ட டோக்கனை, வாக்காளர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகளிலும், முக்கிய கட்சிகள், அவரவர் பங்குக்கு, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து முடித்து விட்டனர். இதில், ஒரு சில இடங்களில், பணம் கொடுக்கும்போது, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர் பிடிபட்டனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர் தொகுதிகளில் போட்டியிடும், அ.ம.மு.க., வேட்பாளர்கள், பண பட்டுவாடாவை முடிக்கவில்லை. வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம், மேலிடத்தில் இருந்து வரவில்லை என்பதால், சில இடங்களில், மக்களை நம்ப வைப்பதற்காக, 'டோக்கன்' கொடுத்து உள்ளனர். பெரும்பாலானோர்,

அந்த டோக்கனை வாங்க மறுத்து, 'கொடுத்தால் பணமாக கொடுங்கள். இல்லையென்றால் எங்களுக்கு வேண்டாம்' என, கூறியுள்ளனர்.அ.ம.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:கடந்த லோக்சபா தேர்தலின்போது, நிர்வாகிகளை, கட்சி மேலிடம் நன்கு கவனித்தது. இந்த தேர்தலிலும், பணம் கொடுப்பார்கள் என, எதிர்பார்த்தோம். ஆனால், அந்தந்த பூத் செலவுக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை; என்ன காரணம் என, தெரியவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X