1,872 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,872 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரம்

Added : ஏப் 06, 2021
Share
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. தேர்தல் நாளான இன்று, 1,872 ஓட்டுச்சாவடிகளிலும், பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.தமிழகம் முழுதும், சட்டசபை தேர்தல், இன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்துள்ளன. ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்,
 1,872 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரம்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளன. தேர்தல் நாளான இன்று, 1,872 ஓட்டுச்சாவடிகளிலும், பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.தமிழகம் முழுதும், சட்டசபை தேர்தல், இன்று நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்துள்ளன. ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் என, நான்கு தொகுதிகளிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.தேர்தலுக்காக, மாவட்டம் முழுதும், 1,872 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இதில், 245 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், �வெப் கேமரா' மற்றும் நுண் பார்வையாளர்களால் கண்காணிக்கப்படுகிறது. பெண்கள் மட்டும் ஓட்டளிக்க, நான்கு சிறப்பு ஓட்டுச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.மாவட்டத்தில் மொத்தம், 13 லட்சத்து, 13 ஆயிரத்து, 714 வாக்காளர்கள் உள்ளன. இவர்களில், 80 வயதுக்கு மேற்பட்டோர், 23 ஆயிரத்து, 890 பேரும், 8,109 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் உள்ளனர். பார்வையற்ற வாக்காளர்கள், �பிரெய்லி ஷீட்' மூலம் ஓட்டளிக்கலாம்.அந்தந்த தொகுதியில் உள்ள ஸ்டராங்க் ரூமில் இருந்து, அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், நேற்றே மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. இயந்திரங்களை எடுத்துச் செல்லும்போது, துணை ராணுவ வீரர், உதவி ஆய்வாளர், எட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஒரு மாதமாக நடைபெற்ற வாகன சோதனையில், 5 கோடி ரூபாய் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.பாதுகாப்பு பணியை பொறுத்தவரை, எஸ்.பி., தலைமையில், இரு கூடுதல் எஸ்.பி., ஏழு துணை காவல் கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள், 14 உதவி ஆய்வாளர்கள், 76 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 997 போலீசார்.மேலும், 124 ஆயுதப்படை போலீஸ், 120 ஊர்க்காவல் படை, 235 துணை ராணுவத்தினர், 642 முன்னாள் ராணுவத்தினர், 250 நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் ஈடுபட உள்ளனர்.இன்று தேர்தல் முடிந்தவுடன், காஞ்சிபுரம் அடுத்த பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லுாரியில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கப்படும்.உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொகுதிகளுக்கு, தேவையான மின்னணு இயந்திரங்கள், விரலில் வைக்கும் மை, முத்திரை அரக்கு, மெழுகு வர்த்தி, சக்கர நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.தவிர, கொரோனா பரவலை தடுக்க, கையுறை, சானிடைசர்,குப்பை தொட்டி, முககவசம், தெர்மல் ஸ்கேனர்என, பாதுகாப்பு உபகரணங்களும், அட்டை பெட்டியில் அடைக்கப்பட்டு, அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கும் அனுப்பப்பட்டன.-----------------------------------தொகுதி ஆண் பெண் மூன்றாம் பாலினம் மொத்தம்காஞ்சிபுரம் 1,49,400 1,59,704 13 3,09,117உத்திரமேரூர் 1,25,683 1,34,651 33 2,60,367ஸ்ரீபெரும்புதுார் 1,72,827 1,82,318 53 3,55,198ஆலந்துார் 1,92,247 1,96,737 48 3,89,032ஓட்டுனர்கள் தகராறுசெய்யூர் தாலுகா அலுவலகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பிற பொருட்கள் ஏற்றிச்செல்ல, வாகனங்களுடன், ஓட்டுனர்கள் தயாராக இருந்தனர். பகல், 1:00 மணிக்கு, முதல் மண்டப பகுதிக்கான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், வாகனங்களில் ஏற்றப்பட்டன.அப்போது, கூடுதல் டீசல் மற்றும் தொகை கேட்டு, வாகனங்களை இயக்க இயலாது என, அலுவலர்களுடன், ஓட்டுனர்கள், தகராறு செய்தனர். இச்செலவு நடைமுறை குறித்து, அலுவலர்கள் விளக்கி, அவர்களை சமாதானப்படுத்திய பிறகே, வாகனங்களை இயக்கினர்.ஓட்டுனர்கள் தகராறுசெய்யூர் தாலுகா அலுவலகத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பிற பொருட்கள் ஏற்றிச்செல்ல, வாகனங்களுடன், ஓட்டுனர்கள் தயாராக இருந்தனர். பகல், 1:00 மணிக்கு, முதல் மண்டப பகுதிக்கான இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், வாகனங்களில் ஏற்றப்பட்டன.அப்போது, கூடுதல் டீசல் மற்றும் தொகை கேட்டு, வாகனங்களை இயக்க இயலாது என, அலுவலர்களுடன், ஓட்டுனர்கள் தகராறு செய்தனர். இச்செலவு நடைமுறை குறித்து, அலுவலர்கள் விளக்கி, அவர்களை சமாதானப்படுத்திய பிறகே, வாகனங்களை இயக்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X