காஞ்சிபுரம்; 'கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர், 42 நாட்களுக்கு பின், இரண்டாம் தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும்' என, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 35 நாட்களில், 1,767 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா அதிகம் பரவுவதால், 45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாவது:மாவட்டத்தில் 1.31 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதில், 36 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டோர், 28 நாட்கள் கழித்து, இரண்டாவது தடுப்பூசி போட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.தற்போது, மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதல்படி, இரண்டாவது தடுப்பூசியை, 42 நாட்கள் கழித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும் என, தெரிவித்துள்ளது. அதனால்,ஒரு மாதத்திற்குள், அடுத்த தடுப்பூசி போடுவதை தவிர்க்கவும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE