நடிகை கங்கனா மனு நீதிமன்றம் தள்ளுபடி

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை : தன் மீதான அவதுாறு வழக்கை ரத்து செய்யக்கோரிய, நடிகை கங்கனா ரணாவத்தின் மனுவை, மும்பை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த ஆண்டு நவம்பரில் அளித்த, 'டிவி' பேட்டியில், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமான கருத்துக்களை தெரிவித்ததாக, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், அந்தேரி நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.இது

மும்பை : தன் மீதான அவதுாறு வழக்கை ரத்து செய்யக்கோரிய, நடிகை கங்கனா ரணாவத்தின் மனுவை, மும்பை நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.



latest tamil news



பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த ஆண்டு நவம்பரில் அளித்த, 'டிவி' பேட்டியில், தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமான கருத்துக்களை தெரிவித்ததாக, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், அந்தேரி நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார்.இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, மும்பை போலீசாருக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது.போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், நடிகை கங்கனா, அவதுாறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்பட்டது.இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, கங்கனாவுக்கு நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியது.


latest tamil news


அவர் ஆஜராக தவறியதை அடுத்து, கங்கனா மீது ஜாமினில் வெளிவரக்கூடிய, 'வாரன்ட்' பிறப்பித்து, நீதிபதி உத்தரவிட்டார். பின், அந்த வாரன்ட் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், தன் மீதான அவதுாறு வழக்கு விசாரணையை ரத்து செய்யும்படி, மும்பை நீதிமன்றத்தில், கங்கனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்து, நேற்று உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-ஏப்-202117:43:10 IST Report Abuse
J.V. Iyer பாவம், கங்கானாவை ஒன்னும் செய்யாதீங்க. நல்ல பொண்ணு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X