சென்னை : கமல் பாணியில், நடிகையும், ஆயிரம்விளக்கு வேட்பாளருமான குஷ்பூ, எதிர் தரப்பினரை நலம் விசாரித்து அரவணைத்துள்ளார்.
தமிழகத்தின், அடுத்த முதல்வர் யார் என்பதை, மக்கள் நாளை முடிவு செய்ய உள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு, முதல்வர் பதவிக்கு, ஐந்து பேர் முட்டி மோதியுள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், சக போட்டியாளர்களுக்கு கடிதம் எழுதினார்.
அதில், 'யார் வெற்றி பெற்றாலும், ஜெயித்தது மக்களே. அனைவரும் சேர்ந்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்' என, சமரசம் பேசினார். கமல் பாணியில் குஷ்பூவும், எதிர் தரப்பினரை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கனிமொழிக்காக, 'சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் அன்பே' என, 'டுவிட்டரில்' குஷ்பூ கூறியுள்ளார். தேர்தல் முடிவுக்கு பின், வரக்கூடிய பிரச்னைகளை சமாளிக்க வேண்டிய வழிமுறைகளை, தேர்தலில் போட்டியிடும் திரையுலகினர், இப்போதே பின்பற்றத் துவங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE