பொது செய்தி

இந்தியா

'பேஸ்புக்' தகவல் கசிவா? பழைய செய்தி என மறுப்பு

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி : 'பேஸ்புக் பயனாளிகள், 53.3 கோடி பேரின் தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்தி, பழையது' என, பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.உலகம் முழுதும், சமூக வலை தளமான, 'பேஸ்புக்'கை, 280 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும், 41 கோடிக்கும் மேற்பட்டோர், இதை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் பயனாளிகள், 53.3 கோடி பேரின் தகவல்கள்,
FB users, facebook, Data Leaked, fb

புதுடில்லி : 'பேஸ்புக் பயனாளிகள், 53.3 கோடி பேரின் தகவல்கள் கசிந்ததாக வெளியான செய்தி, பழையது' என, பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுதும், சமூக வலை தளமான, 'பேஸ்புக்'கை, 280 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும், 41 கோடிக்கும் மேற்பட்டோர், இதை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், பேஸ்புக் பயனாளிகள், 53.3 கோடி பேரின் தகவல்கள், ஆன்லைனில் கசிந்துள்ளன. அதன்படி, 106 நாடுகளை சேர்ந்த பயனாளிகளின் பெயர்கள், தொலைபேசி எண்கள், பிறந்த தேதி, இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியாகி உள்ளன.


latest tamil news


அந்த தகவல்கள், 'ஹேக்கர்'களின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக அமெரிக்காவைச் சேர்ந்த, 3.23 கோடி பயனாளிகளின் தகவல்கள் கசிந்துள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த, 1.15 கோடி பேர்; ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, 73 லட்சம் பேர்; இந்தியாவை சேர்ந்த, 61 லட்சம் பேரின் தகவல்களும் கசிந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

எனினும் இதுகுறித்து பேஸ்புக் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'இவை அனைத்தும் பழைய தரவுகள். கடந்த, 2019ல் ஏற்பட்ட பிரச்னை இது. அதை, அந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே கண்டுபிடித்து சரி செய்துவிட்டோம்' என்றார். ஏற்கனவே, பேஸ்புக் தகவல்களின் பாதுகாப்பு குறித்து, அதன் பயனாளிகள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், தற்போது தங்கள் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தி, பயனாளிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X