தமிழ்நாடு

4 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார்!

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி இரவு 7:00 மணி வரை நடக்கிறது.4 தொகுதிகளில் 1561 ஓட்டுச்சாவடிகளில் 2739 ஆண்கள், 4753 பெண்கள் என 7492 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமித்து நேற்று தேர்தல் பணி

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 74 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி இரவு 7:00 மணி வரை நடக்கிறது.4 தொகுதிகளில் 1561 ஓட்டுச்சாவடிகளில் 2739 ஆண்கள், 4753 பெண்கள் என 7492 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமித்து நேற்று தேர்தல் பணி உத்தரவு வழங்கப்பட்டன.

155 மண்டல அலுவலர்கள், 155 உதவி மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தல் முறைகேடுகளை தடுக்க தொகுதிக்கு தலா 9 பறக்கும் படை, நிலைக்குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழு என 480 பேர் பணியில் உள்ளனர். 782 ஓட்டுச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி ஓட்டுப்பதிவை தேர்தல் ஆணையர் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

பதட்டமான 271 ஓட்டுச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்தலில் 2801 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. போடி தொகுதி ஊரடி, ஊத்துக்காடு, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு ரோடு வசதி இல்லாததால் கழுதைகள் மூலமாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று காலை அனுப்பி வைக்கப்பட்டன.

இதுபோல மாவட்டத்தில் சட்டசபை தொகுதி பாதுகாப்பு மையங்களில் இருந்து அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. போடியில் 9, ஆண்டிபட்டியில் 14 ஓட்டுச்சாவடிகள் மலைப்பகுதியில் உள்ளதால் இதில் தேர்தல் பணிக்கு ஆண் பணியாளர்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டிபட்டி தொகுதியில் 2 ஓட்டுச்சாவடிகளுக்கு மின் இணைப்பு இல்லாததால் ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1375 போலீசார், 907 ஓய்வு பெற்ற போலீசார், 525 மத்திய காவல்படை என 2807 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை 1950, டோல்ப்ரீ 1800 425 6339 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இன்று தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X