பொது செய்தி

இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு ஐஎம்ஏ கடிதம்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடிதம் எழுதியுள்ளது.அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தடுப்பூசி
india, corona, coronavirus, covid, vaccine, IMA, indian medical association, youths, letter, Pm, prime minister, Narendra modi, Modi, இந்திய மருத்துவ சங்கம், ஐஎம்ஏ, தடுப்பூசி, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19,  பிரதமர், மோடி, நரேந்திர மோடி, கடிதம்,

புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடிதம் எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்தும் முறையை போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும். ஆதலால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.


கொரோனா பரவலை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆனால், கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்தும் முறையை போர்க்கால அடிப்படையில் வேகப்படுத்த வேண்டும். ஆதலால் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவரும் இலவசமாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.

latest tamil news



தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தனியார் மருத்துவமனை, சிறிய கிளினிக் போன்றவற்றையும் தீவிரமாக ஈடுபடுத்த வேண்டும். பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் மக்கள் கண்டிப்பாக தடுப்பூசி சான்றிதழை கொண்டு வருவதை கட்டாயமாக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதன் மூலம் தனி நபர்களுக்கு நோய் எதிர்ப்பு அதிகரிப்பதுடன் , நோயின் தீவிரத்தை குறைக்கும் .அனைத்து விதமான மருத்துவர்கள், கிளினிக் நடத்தும் மருத்துவர்களையும் தடுப்பூசி செலுத்துவதில் ஈடுபடுத்தினால், நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க உயர்ந்து வரும் பாதிப்பை தடுக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். திரையரங்குகள், கலாசார, மதரீதியான வழிபாடுகள், விளையாட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-ஏப்-202119:32:16 IST Report Abuse
ஆப்பு 18 வயதுக்கு மேல் யார் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வராங்களோ அவிங்களுக்கு போடணும். விருப்பமில்லாதவர்களை எதுக்கு புடிச்சு தொங்கிக்கிட்டு?
Rate this:
இரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்
07-ஏப்-202105:53:43 IST Report Abuse
இரா. பாலாபயப்படுறியா குமாரு?...
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
06-ஏப்-202115:03:25 IST Report Abuse
ஆரூர் ரங் மஹாராஷ்டிராவில்தான் 6௦ விழுக்காடு பாதிப்பு. ஆனால் அங்கு 18 வயதுக்கு மேற்பட்ட 9கோடி பேருக்கு உடனே தடுப்பூசி போடும் உட்கட்டமைப்பு அங்கில்லை. நான்கு மாதங்களாவது ஆகும். பகுதி ஊரட‌ங்கு மற்றும் சமூக விலகல் இன்னும் இரண்டாண்டுகளுக்கு தொடர்ந்துதானாக வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X