ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் திரிணமுல் தலைவர் வீட்டில் தூங்கிய அதிகாரி சஸ்பெண்ட்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் வீட்டில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.மே.வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தின் உலுபெரியா உத்தர் பகுதியில் ஓட்டுச்சாவடி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த தபன் சர்கார் என்பவர்,
trinamool, congress, voting machine, vvpat, election commission, suspend, திரிணமுல் காங்கிரஸ், திரிணமுல், ஓட்டு இயந்திரம், விவிபேட், தேர்தல் ஆணையம், சஸ்பெண்ட்,

கோல்கட்டா: மே.வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் வீட்டில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.


latest tamil news


மே.வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தின் உலுபெரியா உத்தர் பகுதியில் ஓட்டுச்சாவடி அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த தபன் சர்கார் என்பவர், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களுடன் தனது உறவினரான திரிணமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் நேற்று இரவு உறங்கி உள்ளார்.


latest tamil news


இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் ஆணையம், தபான் சர்காரை சஸ்பெண்ட் செய்தது. மேலும், அவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளது.


latest tamil news


திரிணமுல் காங்கிரஸ் தலைவர்கள் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரங்கள், பயன்பாட்டில் உள்ள இந்தியரங்கள் பழுதானால், அதற்கு பதிலாக மாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த இயந்திரங்கள் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Dindigul,இந்தியா
07-ஏப்-202111:26:33 IST Report Abuse
Karthik this is the main reason why Government initiated privatisation
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஏப்-202100:45:16 IST Report Abuse
தமிழவேல் இதற்கு, எந்தெந்த சந்தர்ப்பங்களில் எப்படி எப்படி செய்யப் படவேண்டும் என்ற ப்ரோடோகோல்கள் கிடையாதா ? அதெப்படி இவ்வளவு பெரிய பொறுப்பை ஒரு "தனி" மனிதனிடம் தருவார்கள் ? ஒருவன் வரும்வழியில் வண்டி ரிப்பேர்ன்னு வேட்பாளர் வண்டியிலேயே பெட்டிகளை ஏத்திகிட்டுப் போறான். இவன் என்னடான்னா கட்சிக்காரன் வீட்டில் வச்சிக்கிட்டு தூங்குறான்.
Rate this:
Cancel
Ramasamy - Chennai,இந்தியா
06-ஏப்-202120:26:14 IST Report Abuse
Ramasamy இதுவல்லவோ உண்மையான ஜனநாயக சுதந்திர நாடு வாழ்க பாரதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X