வாக்கு இயந்திரங்கள் பற்றிய விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி பதிலடி

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (58)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வின் 41-வது துவக்க தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “பா.ஜ., என்பது தேர்தலில் வெற்றிப்பெறும் இயந்திரமல்ல, மற்ற கட்சிகள் தேர்தலில் வெல்லும் போது பாராட்டுவதும், பா.ஜ., வென்றால் இரட்டை கண்ணோட்டத்தில் பார்ப்பதும் நடக்கிறது.” என்றார்.பா.ஜ.,வின் 41-வது துவக்க தின விழாவில் பிரதமர் மேலும் பேசியதாவது: நம்மை தேர்தலில் வெல்லும் இயந்திரம் என்று சொல்பவர்கள், இந்திய
BJP, FoundationDay, EVM, Election Winning Machine, PMModi, வாக்கு இயந்திரம், பாஜக, பிரதமர், மோடி

புதுடில்லி: பா.ஜ.,வின் 41-வது துவக்க தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, “பா.ஜ., என்பது தேர்தலில் வெற்றிப்பெறும் இயந்திரமல்ல, மற்ற கட்சிகள் தேர்தலில் வெல்லும் போது பாராட்டுவதும், பா.ஜ., வென்றால் இரட்டை கண்ணோட்டத்தில் பார்ப்பதும் நடக்கிறது.” என்றார்.

பா.ஜ.,வின் 41-வது துவக்க தின விழாவில் பிரதமர் மேலும் பேசியதாவது: நம்மை தேர்தலில் வெல்லும் இயந்திரம் என்று சொல்பவர்கள், இந்திய ஜனநாயகத்தின் முதிர்ச்சியையும், வாக்காளர்களின் அறிவையும், நம்பிக்கையையும் புரிந்து கொள்ள முடியாது. பா.ஜ., தேர்தலில் வெற்றிபெறும் இயந்திரம் அல்ல, ஆனால் அது தொடர்ச்சியாக, இடைவிடாமல் மக்களின் மனங்களை வெல்வதற்கான பிரசாரத்தில் உள்ளது.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்கு உண்மையாக சேவை செய்கிறோம். நாங்கள் மக்களுடன் இணைந்துள்ளோம். எங்கள் கட்சி வென்றது என நாங்கள் பெருமைப்படுவதில்லை. இந்நாட்டு மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்தார்கள் என பெருமைக் கொள்கிறோம்.


latest tamil newsகழலும் மதச்சார்பின்மை முகமூடி


கேரளா, மேற்கு வங்கத்தில் நமது கட்சியினர் மிரட்டப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள் அவர்களது குடும்பத்தினரையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் அவர்கள் நாட்டிற்காக வாழவும், இறக்கவும் உறுதியாக இருக்கிறார்கள். இது பா.ஜ., தொண்டர்களின் தனித்துவம். மற்றொரு புறம் குடும்பம் மற்றும் வாரிசு சார்ந்த அரசியலுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். பிராந்திய வளர்ச்சி பற்றி பேசிய கட்சிகள் இறுதியில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான கட்சிகளாக மாறியுள்ளன. இந்த கட்சிகள் போலி மதச்சார்பின்மை முகமூடியை அணிந்திருந்தன. அது இப்போது அகற்றப்பட்டு வருகிறது.


latest tamil newsகற்பனை அச்சங்கள் உருவாக்கப்படுகின்றன!


சி.ஏ.ஏ., வேளாண் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் போன்றவற்றிற்கு எதிராக அரசியல் இருப்பதையும் ஒரு பெரிய சதி இருப்பதையும் தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை உருவாக்கும் முயற்சி உள்ளது. அதனாலேயே அனைத்து வதந்திகளும் பரப்பப்படுகின்றன. கற்பனை அச்சங்கள் உருவாக்கப்படுகின்றன.

சில சமயம் அரசியலமைப்பு மாற்றப்படும் என்கிறார்கள். சில நேரங்களில் குடியுரிமையை பிடுங்கி விடுவார்கள் என்கின்றனர். இடஒதுக்கீட்டை திரும்பப் பெறுவார்கள், விவசாயிகளின் நிலத்தை எடுத்துக்கொள்வார்கள் என்றெல்லாம் கூறுகின்றனர். முழுமையான தகவல்களுடன் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
07-ஏப்-202118:59:04 IST Report Abuse
SAPERE AUDE ஓட்டு பதிவு இயந்திரங்களில் ஒரே சின்னத்தில் பதிவு செய்யும்படி எந்த மாற்றமும் செய்ய இயலாது. அவைகளை பலமுறை நிபுணர்களால் பரிசோதித்தபிறகே தேர்தலில் உபயோகிக்க அனுப்பப் படுகின்றன.
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
07-ஏப்-202111:50:57 IST Report Abuse
Srinivas.... எல்லோரும் கேட்டாச்சா? போ...போ....இனிமேல் யாருக்கும் EVM பற்றிய சந்தேகம்? இல்லையே....அதுதான் நல்லது...குட் சிட்டிசன். கூட்டத்தை கலைக்க என்ன பாடுபடவேண்டியிருக்கு.
Rate this:
Cancel
KM Prabhu - SIVAKASI ,இந்தியா
07-ஏப்-202111:30:12 IST Report Abuse
KM Prabhu In the year 2013, lot of people across the nation including myself believed him but what happened? nothing any no developments, only his party has grown well and his party people became rich lot. they learn to demolish several things best example : petrol and diesel prices then hike in prices of all essential commodities. he often talk about religions.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X