அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் ஓட்டு போட்ட உதயநிதி: அதிமுக புகார்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
சென்னை: கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் வந்து ஓட்டு போட்ட திமுக இளைஞரணி செயலர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி போட்டியிடுகிறார். இன்று, உதயநிதி , தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள ஓட்டுச்சாவடியில், தனது தந்தை
உதயநிதி, திமுக, ஸ்டாலின், சின்னம், அதிமுக, புகார்,

சென்னை: கட்சி சின்னம் பொறித்த சட்டையுடன் வந்து ஓட்டு போட்ட திமுக இளைஞரணி செயலர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலர் உதயநிதி போட்டியிடுகிறார். இன்று, உதயநிதி , தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள ஓட்டுச்சாவடியில், தனது தந்தை ஸ்டாலின், தாயார் துர்கா, மனைவியுடன் வந்து, வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.


latest tamil news



அப்போது, உதயசூரியன் சின்னம் பொறித்த சட்டையை உதயநிதி அணிந்திருந்தார். இது தேர்தல் விதிகளைமீறிய செயல் எனக்கூறி உதயநிதி மீது அதிமுகவின் பாபு முருகவேல், தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஏப்-202100:48:45 IST Report Abuse
தமிழவேல் இதுபோல சின்னங்களை அணிந்த்துவர உரிமை இல்லை என்று தோன்றுகின்றது. மோடிஜி தனது தேர்தலிலும் இது போல ஒன்று செய்தார்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07-ஏப்-202100:37:03 IST Report Abuse
Pugazh V GMM.KA, நேரில் பார்த்த மாதிரி உளறக்கூடாது. உதயநிதி மாஸ்க் அணிந்திருந்தார். புகைப்படக்காரர் ஒருவர் கேட்டு கொண்டதால் கழற்றி கையில் வைத்துக்கொண்டு ஊடகவியலாளர்களுக்காக போஸ் கொடுத்தார். இவ்வளவு பேசறீங்களே..தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ, கடந்த நான்கு நாட்களாக எல்லா பேட்டியிலுமே முகக்கவசம் அணியாமல் தானே பேசுகிறார்.. அருகில் நிற்கும் உதவியாளர் செய்கைமொழியில் பேசுகிறவருக்கும் மாஸ்க் இல்லை. இதை ஏன் யாரும் சுட்டி காட்டவில்லை.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
06-ஏப்-202123:32:37 IST Report Abuse
Mani . V சரி, சரி, "யானைக்கும் பானைக்கும் சரியா போச்சு". வானதி சீனிவாசன் செய்ததுக்கு, வருங்கால முதல்வர் உதயநிதி நேர் செய்து விட்டார்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
07-ஏப்-202105:55:39 IST Report Abuse
 Muruga Velநீங்க பானையா ..யானையா.....
Rate this:
07-ஏப்-202106:06:06 IST Report Abuse
இவன் ஏன் மணி, சன் tv ல வானதிய சொன்னானுங்க இவன சொல்லவே இல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X