சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி. கனிமொழி, பி.பி.இ.,கிட் உடையணிந்து வந்து இன்று மாலை ஒட்டுப்போட்டார்.
இன்று மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஆம்புலன்சில் வந்தார் தி.மு.க., எம்.பி. கனிமொழி, அங்கு தனது வாக்கை பதிவு செய்தார். அப்போது பி.பி.இ. கிட் எனப்படும் முழு உடலுக்கான பிரத்யேக பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து வாக்கை செலுத்தினார். ஓட்டளித்துவிட்டு வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் பேட்டிகாண முயன்றனர்.
எனினும் செய்தியாளர்களிடம் இடது கை விரலில் அடையாள மை இட்டதை காட்டியபடி ஆம்புலன்சில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்.
கடந்த சில தினங்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் ஓட்டளிக்க வருவாரா? என கேள்வி எழுந்தது. தகுந்த பாதுகாப்பு உடையணிந்து வந்து வாக்கை பதிவு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE