அறிவியல் ஆயிரம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஏப் 06, 2021
Share
பீட்ரூட் ஜூஸ்'பீட்ரூட்' ஜூஸ் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு மூளை செயல்பாடு, ரத்த நாளங்கள் குறைபாட்டை போக்கும் என பிரிட்டனின் எக்ஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. வயதானவர்களுக்கு மிகவும் நல்லது என தெரிவித்துள்ளனர். பாலை காய்ச்சி குளிர வைக்கவும். பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறம்


பீட்ரூட் ஜூஸ்



'பீட்ரூட்' ஜூஸ் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு மூளை செயல்பாடு, ரத்த நாளங்கள் குறைபாட்டை போக்கும் என பிரிட்டனின் எக்ஸ்டர் பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. வயதானவர்களுக்கு மிகவும் நல்லது என தெரிவித்துள்ளனர். பாலை காய்ச்சி குளிர வைக்கவும். பீட்ரூட் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறம் அந்தத் தண்ணீரில் இறங்கும். அந்த தண்ணீரோடு சேர்த்து பீட்ரூட், புதினா, ஏலக்காய், இஞ்சி, சேர்த்து பால் ஊற்றி மிக்சியில் அரைக்கவும். அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.


தகவல் சுரங்கம்



உலக சுகாதார தினம்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கேற்ப சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 7ல் உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அனைவருக்குமான சிறந்த, ஆரோக்கியமான உலகை உருவாக்குவோம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. அதுவும் தற்போதைய கொரோனா சூழலில் சுகாதாரம் மிக அவசியம். உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். சரியான சத்தான உணவு எடுத்துக்கொள்ளுதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மனதை மகிழ்ச்சியாக வைத்திருத்தல் மிக அவசியம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X