சென்னை : தமிழகத்தில் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து நிறைவடைந்தது. கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பலரும் ஆர்வமுடன் ஓட்டளித்து தங்கள் ஜனநாயக கடையை நிறைவேற்றினர்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி தமிழக சட்டசபை தேர்தல், மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தல், இன்று காலை, 7:00 மணி துவங்கியது. ஓட்டளிக்க வரும் வாக்காளர்களுக்கு ஓட்டுச் சாவடிகளில், கையுறை வழங்கப்பட்டது. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், அறிகுறி உள்ளவர்கள், உடல் வெப்பநிலை சராசரிக்கு மேல் இருப்போர், மாலை, 6:00ல் இருந்து, இரவு, 7:00 மணிக்குள் ஓட்டளிக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
![]()
|
இதையடுத்து இன்று காலை ஒட்டுப்பதிவு துவங்கிய முதலே அரசியல் கட்சி தலைவர்கள் ஆர்வமுடன் ஒட்டளித்தனர். தி.மு.க.தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் வந்து வரிசையில் நின்று ஓட்டளித்தார்.
முதல்வர் பழனிசாமி, தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டளித்தார். துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது தாயாருடன் வந்து ஓட்டளித்தார். பின்னர் நடிகர் ரஜினி, கமல், விஜய், பிரபு, அஜித், விஜய் சேதுபதி, விக்ரம், என திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஆர்வமுடன் ஓட்டளித்தார்.
சீல் வைக்கும் பணி
ஒரு சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. எனினும் உடனே அவை சரி செய்யப்பட்டு ஓட்டுப்பதிவு துவங்கியது.எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இன்றி இன்று மாலை 7 மணியுடன் ஒட்டுப்பதிவு நிறைவடந்தது. பின்னர் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, ஓட்டு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு உயர் பாதுகாப்பு அறையில் பூட்டி வைக்கப்படும். மே 2-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
5 மாநில தேர்தல் அமைதியாக முடிந்தது
இன்று நடந்த தமிழகம், கேரளா, மேற்குவங்கம்(3வது கட்டம்) புதுச்சேரி, அசாம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE