கோர்ட் செய்தி

தமிழ்நாடு

யாதவா கல்லூரியை நிர்வகிக்க நீதிபதி நியமனம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
மதுரை யாதவா கல்லுாரியை நிர்வகிக்க உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ராஜேஸ்வரனை நியமித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.யாதவர் கல்வி நிதி சங்கத்தின் கீழ் மதுரை திருப்பாலையில் யாதவா கல்லுாரி செயல்படுகிறது. இந்நிர்வாகத்தில் பிரச்னை ஏற்பட்டது.சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியாக பதிவுத்துறை டி.ஐ.ஜி., வாசுகி, கல்லுாரியை நிர்வகிக்க மதுரை கலெக்டரை தனி அதிகாரியாக

மதுரை யாதவா கல்லுாரியை நிர்வகிக்க உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) ராஜேஸ்வரனை நியமித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

யாதவர் கல்வி நிதி சங்கத்தின் கீழ் மதுரை திருப்பாலையில் யாதவா கல்லுாரி செயல்படுகிறது. இந்நிர்வாகத்தில் பிரச்னை ஏற்பட்டது.சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியாக பதிவுத்துறை டி.ஐ.ஜி., வாசுகி, கல்லுாரியை நிர்வகிக்க மதுரை கலெக்டரை தனி அதிகாரியாக நியமித்து 2018ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை ரத்து செய்து, நடுநிலையான அதிகாரியை நியமித்து, உண்மையான உறுப்பினர்களை அடையாளம் கண்டு சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும்; தேர்வு செய்யப்படும் நிர்வாகக்குழுவிடம் நிர்வாகத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கலாகின.

நீதிபதி வி.பார்த்திபன் உத்தரவு: துரதிஷ்டவசமாக பல்வேறு வழக்குகளால் சங்கம் மற்றும் கல்லுாரி நிர்வாக செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. சங்கம் மற்றும் கல்லுாரியை நிர்வகிக்க சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை இந்நீதிமன்றம் நியமிக்கிறது. அவர் சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினர்களை அடையாளம் காண முன்னுரிமை அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தி, தேர்வு செய்யப்படும் நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் சங்கம் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும். சங்கம், கல்லுாரிக்கு தனி அதிகாரிகளை நியமித்த தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X