மச்சான்ஸ்க்கு ஆதரவு!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'மச்சான்ஸ்'க்கு ஆதரவு!

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (2)
Share
மச்சான்ஸ்'க்கு ஆதரவு!மதுரை வடக்கு தொகுதி, பா.ஜ., வேட்பாளர் சரவணனை ஆதரித்து, நடிகை நமீதா, சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், 'மச்சான்ஸ் எப்படி இருக்கீங்க... தாமரைக்கு ஓட்டு போட்டால், மத்திய - மாநில அரசு திட்டங்கள் வீடு தேடி வரும். ஆறு சிலிண்டர்கள் கிடைக்கும். பிரியாணி செய்து சாப்பிடலாம். என்னை கூட கூப்பிடுங்க. ஆனால் எனக்கு, வெஜ் பிரியாணி தான் வேணும்...'
 பக்க வாத்தியம்

மச்சான்ஸ்'க்கு ஆதரவு!

மதுரை வடக்கு தொகுதி, பா.ஜ., வேட்பாளர் சரவணனை ஆதரித்து, நடிகை நமீதா, சமீபத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார்.அவர் பேசுகையில், 'மச்சான்ஸ் எப்படி இருக்கீங்க... தாமரைக்கு ஓட்டு போட்டால், மத்திய - மாநில அரசு திட்டங்கள் வீடு தேடி வரும். ஆறு சிலிண்டர்கள் கிடைக்கும். பிரியாணி செய்து சாப்பிடலாம். என்னை கூட கூப்பிடுங்க. ஆனால் எனக்கு, வெஜ் பிரியாணி தான் வேணும்...' என்றார்.அங்கிருந்த இளைஞர் ஒருவர், 'தேர்தல் வந்தால் தான், நாம எல்லாம் மச்சானா தெரியுறோம்...' என, அலுத்துக் கொண்டார்.அவரின் நண்பர், 'அரசியல் தலைவர்களை, 'மாமா, அம்மா, அண்ணி'ன்னு என்னென்னமோ உறவுமுறை சொல்லி கூப்பிடுறோம்... ஆனால் நமீதா, நம்மளை மச்சான்னு கூப்பிடக் கூடாதா?' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X