பொது செய்தி

தமிழ்நாடு

குதிரைகளில் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
போடி: தேனி மாவட்டம் போடி ஒன்றியம் கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட சென்ட்ரல் - ஸ்டேஷன் மலைக்கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரைகள் மூலம் நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், காரிப்பட்டி, அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு
 குதிரைகளில் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

போடி: தேனி மாவட்டம் போடி ஒன்றியம் கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட சென்ட்ரல் - ஸ்டேஷன் மலைக்கிராமத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரைகள் மூலம் நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட முட்டம், முதுவாக்குடி, சென்ட்ரல், காரிப்பட்டி, அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு பகுதிகள் மலைக்கிராமங்கள். சென்ட்ரல் ஸ்டேஷன் மலைப்பகுதியில் 190 வாக்காளர்கள், காரிப்பட்டியில் 157 வாக்காளர்கள், அகமலை 667, ஊரடி- ஊத்துக்காடு பகுதியில் 463, கண்ணக்கரையில் 205 பேர் உள்ளனர்.போடியிலிருந்து இப்பகுதிகளுக்கு செல்ல ரோடு வசதி இல்லை.

இதனால் குரங்கணியிலிருந்து 30 கி.மீ., தொலைவில் உள்ள சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும், போடியிலிருந்து 13 கி.மீ., துாரம் உள்ள காரிப்பட்டிக்கும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களை, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு குதிரைகள் மூலமாக மண்டல அலுவலர் சிவக்குமார் தலைமையில் நேற்று கொண்டு சென்றனர்.பெரியகுளம் அருகே உள்ள ஊரடி ஊத்துக்காடுக்கு கண்ணக்கரை வழியாக 8 கி.மீ.,துாரம் குதிரைகள் மூலமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

153 ஓட்டு 102 கி.மீ., பயணம்

போடி ஒன்றியம் கொட்டகுடி ஊராட்சிக்கு உட்பட்ட டாப்-ஸ்டேஷன் மலைப்பகுதி, போடியில் இருந்து குரங்கணி வழியாக 40 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு 153 ஓட்டுக்கள் உள்ளன. குரங்கணியிலிருந்து டாப்-ஸ்டேஷன் செல்வதற்கு ரோடு வசதி இல்லை. இதனால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கேரளா மூணாறு வழியாக 103 கி.மீ., துாரம் ஜீப்பில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.

இது போல 148 வாக்காளர்கள் உள்ள கொழுக்கு மலை கிராமத்திற்கு போடியிலிருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள கேரளா, சூரியநெல்லிக்கு சென்று, அங்கிருந்து 10 கி.மீ., துாரம் குண்டும், குழியுமாக உள்ள ரோட்டில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X