சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அமைச்சர் பந்தாவில் வலம் வரும் தி.மு.க., 'மாஜி!'

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அமைச்சர் பந்தாவில் வலம் வரும் தி.மு.க., 'மாஜி!'''கடைசி நேரத்துல, கச்சிதமா பட்டுவாடாவை முடிச்சிருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.''எந்தக் கட்சியினரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''திருவண்ணாமலை மாவட்டத்துல, எட்டு தொகுதிகள்லயும், தி.மு.க.,வே போட்டியிட்டது... இதுல, அஞ்சு பேர், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள்... இவங்க,


 டீ கடை பெஞ்ச்


அமைச்சர் பந்தாவில் வலம் வரும் தி.மு.க., 'மாஜி!'



''கடைசி நேரத்துல, கச்சிதமா பட்டுவாடாவை முடிச்சிருக்காங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அந்தோணிசாமி.

''எந்தக் கட்சியினரை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருவண்ணாமலை மாவட்டத்துல, எட்டு தொகுதிகள்லயும், தி.மு.க.,வே போட்டியிட்டது... இதுல, அஞ்சு பேர், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்கள்... இவங்க, தொகுதிக்கு பெருசா எதுவும் செய்யாததால, மக்கள் கடும் அதிருப்தியில இருந்திருக்காங்க...

''இதனால, முதல்ல ஓட்டுக்கு, 500 ரூபாய் வழங்க இருந்ததை, 1,000 ரூபாயா அதிகரிச்சிட்டாங்க... அதையும், மகளிர் குழுக்கள், கேபிள் ஆப்பரேட்டர்கள், பால்காரர்கள், மளிகை கடைகள் மூலமா, கடைசி நேரத்துல, கச்சிதமா பட்டுவாடாவை முடிச்சிருக்காங்க...

''இப்படி விதைச்சது, மே, 2 ஓட்டு எண்ணிக்கையில அறுவடையாகிடும்னு நம்பிட்டு இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.''நால்வர் அணி அதிருப்தியில இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழக பா.ஜ.,வுல, மாநில பொதுச் செயலர்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன், செல்வகுமார், பேராசிரியர் சீனிவாசன் ஆகிய நாலு பேரும், வேட்பாளர் பட்டியல்ல இடம் பிடிக்க, ரொம்பவே ஆர்வமா இருந்தா ஓய்...

''மதுரை வடக்குல, சீனிவாசனுக்கு வாய்ப்பு பிரகாசமா இருந்தும், தி.மு.க.,வுல இருந்து கடைசி நேரத்துல, கட்சிக்குள்ள வந்த டாக்டர் சரவணன் தட்டிண்டு போயிட்டார்... அதே மாதிரி, மயிலாப்பூர் அல்லது வேளச்சேரியை, கே.டி.ராகவனுக்காக கேட்டு பார்த்தும், அ.தி.மு.க., தர மறுத்துடுத்து ஓய்...

''கோவை தெற்குல, செல்வகுமார் முயற்சி செய்தார்... அங்க, தேசிய மகளிர் அணி தலைவர் வானதிக்கு குடுத்துட்டா... அதே மாதிரி, கரு.நாகராஜனும், ஆயிரம் விளக்கு தொகுதிக்கு அடி போட்டு பார்த்தும், கடைசியில, குஷ்புவுக்கு தொகுதி போயிடுத்தோல்லியோ... இதனால, இந்த நாலு பேருமே அதிருப்தியில இருக்காளாம் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இப்ப இல்லாட்டியும், வரும் காலங்கள்ல வாய்ப்பு தராமலா போயிடுவாவ...'' என்ற அண்ணாச்சியே, ''மறுபடியும் நீ அமைச்சர்னு சொன்னதுல இருந்து, அந்த பந்தாவுலயே வலம் வர்றாரு வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளரான, 'மாஜி' அமைச்சர் பெரியகருப்பன், கடவுள் பக்தி நிறைஞ்சவரு... சமீபத்துல, தன் குலதெய்வமான, சு.வேலாங்குடியில உள்ள சாம்பிராணி கருப்பன்சாமி கோவில்ல போய், குறி கேட்டிருக்காரு வே...

''அங்க சாமியாடி குறி சொன்ன பெரியவர், '75 ஆயிரம் ஓட்டுகள்ல நீ ஜெயிப்பே... மறுபடியும் மந்திரியாவே'ன்னு சொல்லியிருக்காரு... இதைக் கேட்டதுல இருந்து, பெரியகருப்பன், அமைச்சர் மாதிரியே நடந்துக்க ஆரம்பிச்சிட்டாரு வே... கார்ல சைரன் வைக்காத குறை தானாம்...'' என்றார், அண்ணாச்சி.

''அது சரி... நெனப்பு பொழப்பை கெடுக்காம இருந்தா சரிதான் பா...'' என்றபடியே அன்வர்பாய் கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
07-ஏப்-202106:18:48 IST Report Abuse
D.Ambujavalli ‘புது வரவு’ களுக்கு முக்கியம் அளித்து விசுவாசிகளை கண்டுக்காமல் விட்டால், இவர்கள் கூடாரம் மாற்ற ஆரம்பித்துவிடுவார்கள் எல்லாக் கட்சிகளும் ‘வழி மாறிய’ மகன்களுக்கு தான் ஆடு வெட்டுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X