ஏப்., 7, 2001
கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், 1922 அக்., 8ம் தேதி பிறந்தவர், ஜி.என்.ராமச்சந்திரன். பெங்களூரில் உள்ள, இந்திய அறிவியல் கழகத்தில், இயற்பியலில், டி.எஸ்.சி., பட்டமும்; இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.பல்வேறு நாடுகளில், ஆராய்ச்சியாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தும், இந்தியாவிலேயே பணிபுரிய விரும்பினார்.சென்னைப் பல்கலையில், இயற்பியல் துறைத் தலைவராக பணியாற்றினார். 'கிரிஸ்டலோகிராபி, பயோபிசிக்ஸ்' என்ற புதிய துறைகளை, சர்வதேச தரத்துடன் உருவாக்கினார்.
'எக்ஸ்-' கதிர் படிகவியல், கூடுதல், 'ஆப்டிகல்' குறித்த இவரது ஆய்வுகள், 'எக்ஸ்-ரே' துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது, 'பெப்டைட்' தொகுப்பு குறித்த ஆராய்ச்சி, 'ராமச்சந்திரன் பிளாட்' என்றழைக்கப்படுகிறது. மூலக்கூறு உயிரியல், படிக இயற்பியல் மற்றும் கிரிஸ்டல் ஆப்டிக்ஸ் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார். அறிவியல், மதம், தத்துவம் குறித்து கவிதைகள் இயற்றியுள்ளார். சர்வதேச, தேசிய அளவில் ஏராளமான விருதுகள் பெற்றார். கடந்த, 2001 ஏப்., 7ம் தேதி, தன், 79வது வயதில் இயற்கை எய்தினார்.விஞ்ஞானி ஜி.என்.ராமச்சந்திரன் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE