இந்தியா - யு.ஏ.இ., வர்த்தகம் ரூ. 8 லட்சம் கோடியாக உயரும்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
துபாய்: இந்தியா மற்றும் மேற்காசிய நாடுகளான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேல் இடையேயான முத்தரப்பு வர்த்தகம் 2030ம் ஆண்டில் எட்டு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச இந்தோ - இஸ்ரேல் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாயில் நடந்தது.வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்

துபாய்: இந்தியா மற்றும் மேற்காசிய நாடுகளான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேல் இடையேயான முத்தரப்பு வர்த்தகம் 2030ம் ஆண்டில் எட்டு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இந்தோ - இஸ்ரேல் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு சார்பில் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி துபாயில் நடந்தது.வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர் இஸ்ரேலியர் உள்ளிட்டோரை வர்த்தகம் கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் இணைக்கும் வகையில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியா இஸ்ரேல் யு.ஏ.இ. துாதர்கள் 'வரும் 2030ம் ஆண்டில் முத்தரப்பு வர்த்தகம் எட்டு லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இந்தியா - யு.ஏ.இ. இடையேயான இருதரப்பு வர்த்தகம் 7.34 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்' என தெரிவித்துள்ளனர்.

''மூன்று நாடுகளுக்கு இடையே அதிக வர்த்தக வாய்ப்புகள் உள்ளதால் இந்த நாடுகள் மற்றும் மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்'' என துபாய்க்கான இந்தியத் துாதர் அமன் புரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X