புதிய இந்தியா!
வரும், 2047ல், நம் நாட்டின், 100வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம். அப்போது, புதிய இந்தியாவை உருவாக்கிஇருப்போம் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை, நாம் இப்போதே துவக்க வேண்டும்.
வெங்கையா நாயுடு
துணை ஜனாதிபதி
கடும் குற்றம்!
கொரோனா பரவலை தடுக்க, மக்கள் அனைவரும் தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியில் செல்வதை, கடும் குற்றமாக கருத வேண்டும். முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர், தனக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் நோயை பரப்பும் ஆபத்து உள்ளது.
சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,
பயப்பட மாட்டேன்!
மேற்கு வங்கத்தில், ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள், தொண்டர்களை தாக்குதல் போன்ற செயல்களில், பா.,ஜ.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிரட்டல், வன்முறையை பார்த்து, ஒருபோதும் பயப்பட மாட்டேன். அராஜகத்தால் வெற்றி பெறலாம் என்ற, பா.ஜ.,வின் எண்ணம் நிறைவேறாது.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர்,
திரிணமுல் காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE