பொது செய்தி

இந்தியா

வேகமெடுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி,:கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அதை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. முதல் முறையாக, கடந்த, 24 மணி நேரத்தில், 43 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 43 லட்சம்கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:நாடு முழுதும் கடந்த, 24 மணி நேரத்தில், 43 லட்சம் டோஸ் தடுப்பூசிகள்
வேகமெடுத்த  தடுப்பூசி செலுத்தும் பணிகள்

புதுடில்லி,:கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அதை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகம் எடுத்துள்ளன. முதல் முறையாக, கடந்த, 24 மணி நேரத்தில், 43 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.


43 லட்சம்



கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கை:நாடு முழுதும் கடந்த, 24 மணி நேரத்தில், 43 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டன. தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி, 80 நாட்கள் ஆன நிலையில், இது, ஒரே நாளில் செலுத்தப்பட்ட அதிகபட்ச டோஸ் ஆகும்.

இதுவரை, 8.31 கோடி டோஸ் தடுப்பூசிகள், மக்களை சென்றடைந்து உள்ளன. இதில், 7.22 கோடி பேர், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுஉள்ளனர்.நாடு முழுதும், 60 வயதுக்கு மேற்பட்ட, 8.12 லட்சம் பேருக்கு, இரு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. அதேபோல், 45 வயதிற்கு மேற்பட்டவர்களில், 3.85 லட்சம் பேர், இரு டோஸ்களும்; 1.94 கோடி பேர், முதல் டோசும் செலுத்தி கொண்டனர்.


பாதிப்பு

தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கையில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இங்கு, 81.27 லட்சம் டோஸ், மக்களை சென்றடைந்துள்ளன.அடுத்ததாக, குஜராத்தில், 76.89 லட்சம், ராஜஸ்தானில், 72.99; உத்தர பிரதேசத்தில், 71.98; மேற்கு வங்கத்தில், 65.41 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

கடந்த, 24 மணி நேரத்தில், 96 ஆயிரத்து, 982 பேரிடம் கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களில், 80.04 சதவீதம் பேர் தமிழகம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, டில்லி உட்பட, எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


97 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

நாட்டில் கடந்த, 24 மணி நேரத்தில், 96 ஆயிரத்து, 982 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டு உள்ளனர். இதுவரை பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 26 லட்சத்து, 86 ஆயிரத்து, 49 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து, ஒரு கோடியே, 17 லட்சத்து, 32 ஆயிரத்து, 279 பேர் குணமடைந்து உள்ளனர்.

வைரஸ் பாதிப்பிற்கு, 7.88 லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவால் நேற்று ஒரே நாளில், 446 பேர் உயிரிழந்து உள்ளனர். இது, நாட்டின் வைரஸ் பலி எண்ணிக்கையை, ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 547 ஆக உயர்த்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X