பொது செய்தி

இந்தியா

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இந்திய மருத்துவர் சங்கம் பிரதமரிடம் கோரிக்கை

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா பரவலின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.நடவடிக்கைகொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதை தடுப்பதற்கு, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி இந்திய மருத்துவர் சங்கம் பிரதமரிடம் கோரிக்கை

புதுடில்லி:'கொரோனா பரவலின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்திய மருத்துவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.


நடவடிக்கை

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதை தடுப்பதற்கு, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில், ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவர்கள் சங்கம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுதும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே, தடுப்பூசி போட்டு வருகிறோம்.தடுப்பூசி போடும் பணி, போர்க்கால அடிப்படையில் நடக்க வேண்டும். இதில், சில பரிந்துரைகளை இந்திய மருத்துவர்கள் சங்கம் முன்வைக்க விரும்புகிறது.நாடு முழுதும் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகள் மட்டுமின்றி, தனியார் கிளினிக்குகளிலும் தடுப்பூசி கிடைக்க வேண்டும்.நம்பிக்கைதங்கள் குடும்ப மருத்துவர் உட்பட, அனைத்து டாக்டர்களிடமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற நிலை வரும்போது, மக்கள் மத்தியில் நம்பிக்கையும், ஆர்வமும் அதிகரிக்கும்.பொது வினியோக திட்டத்தின் கீழ் பொருட்களை பெறவும், பொது இடங்களுக்கு செல்லவும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் அவசியம் என உத்தரவிட வேண்டும்.

தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கவும், அரசு மற்றும் தனியார் பங்கேற்புடன், மாவட்ட அளவிலான தடுப்பூசி பணிக்குழு அமைக்கப்பட வேண்டும். இதில் பங்கேற்க, இந்திய மருத்துவ சங்கம் தயாராக உள்ளது.

தீவிர தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர, குறைந்த கால முழு ஊரடங்குகள் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம். திரை அரங்குகள், கலாசார, ஆன்மிக கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
07-ஏப்-202108:02:24 IST Report Abuse
Loganathan Kuttuva தேர்தல் முடிந்துவிட்டதால் அரசியல் கூட்டங்களுக்கும் கட்டுப்பாடு தேவை .வளர்ந்த நாடுகளில் பதினெட்டு வயது கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது .இங்கும் வெளியில் சென்று பணிபுரிபவர்கள் வயது வித்தியாசம் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X