2 அடி உயர இளைஞருக்கு மணப்பெண் கிடைச்சாச்சு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2 அடி உயர இளைஞருக்கு மணப்பெண் கிடைச்சாச்சு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (3)
Share
லக்னோ: உத்தர பிரதேசத்தில், 2 அடி உயரமுள்ளதால், தனக்கு சரியான ஜோடி கிடைக்காமல், போலீஸின் உதவியை நாடிய இளைஞருக்கு, தற்போது பொருத்தமான மணப்பெண் கிடைத்துள்ளார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷாமிலி மாவட்டம் கைரானாவைச் சேர்ந்த, அஜீம் மன்சூரி, அங்கு கடை நடத்தி வருகிறார். இவர், 2 அடி உயரமுள்ளதால், தனக்கு சரியான மணப்பெண்
 2 அடி உயர இளைஞருக்கு மணப்பெண் கிடைச்சாச்சு

லக்னோ: உத்தர பிரதேசத்தில், 2 அடி உயரமுள்ளதால், தனக்கு சரியான ஜோடி கிடைக்காமல், போலீஸின் உதவியை நாடிய இளைஞருக்கு, தற்போது பொருத்தமான மணப்பெண் கிடைத்துள்ளார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷாமிலி மாவட்டம் கைரானாவைச் சேர்ந்த, அஜீம் மன்சூரி, அங்கு கடை நடத்தி வருகிறார். இவர், 2 அடி உயரமுள்ளதால், தனக்கு சரியான மணப்பெண் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டு வந்தார்.கடந்த, 2019ல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது, தனக்கு சரியான ஜோடியை பார்க்கும்படி, முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

போலீசுக்கும் சமீபத்தில், இது போன்ற கோரிக்கையை அவர் விடுத்தார்; அது சமூக வலை தளங்களில் பரவியதால், மன்சூரி பிரபலமானார்.சமூக வலைதளத்தில் இதைப் பார்த்த, ஹாபுரைச் சேர்ந்த சிலர், அந்தப் பகுதியைச் சேர்ந்த, புஷாரா என்ற பெண் குறித்து, தகவல் அனுப்பி வைத்தனர். புஷாராவும் உயரம் குறைவாக உள்ளவர்.

இதையடுத்து, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டு தேடலுக்குப் பின், தன் உயரத்துக்கு ஏற்ற மணப்பெண் கிடைத்ததில், மன்சூரி மகிழ்ச்சி அடைந்துள்ளார். மணப்பெண்ணுக்கும் சரியான ஜோடி கிடைத்த மகிழ்ச்சி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X