சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

கனடா நாட்டில் தமிழிசை பள்ளி நடத்துகிறேன்!

Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கனடா நாட்டில் தமிழ் குழந்தைகளுக்கு இசைப்பள்ளி நடத்தி, ஏராளமானோருக்கு தமிழ் மற்றும் பாரம்பரிய இசையை கற்றுக் கொடுத்து வருவது குறித்து, சாருமதி மனோகாந்தன்: நாங்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். கனடாவில், டொரன்டோ நகரில் வசிக்கிறோம். என் குடும்பம் இசைக் குடும்பம். இலங்கையில் மணிபல்லவம் என்று அழைக்கப்படும் நயினா தீவு தான் என் பூர்வீகம். என் தாத்தா, அம்மா, அப்பா, அண்ணா,
சொல்கிறார்கள்

கனடா நாட்டில் தமிழ் குழந்தைகளுக்கு இசைப்பள்ளி நடத்தி, ஏராளமானோருக்கு தமிழ் மற்றும் பாரம்பரிய இசையை கற்றுக் கொடுத்து வருவது குறித்து, சாருமதி மனோகாந்தன்: நாங்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்கள். கனடாவில், டொரன்டோ நகரில் வசிக்கிறோம். என் குடும்பம் இசைக் குடும்பம். இலங்கையில் மணிபல்லவம் என்று அழைக்கப்படும் நயினா தீவு தான் என் பூர்வீகம். என் தாத்தா, அம்மா, அப்பா, அண்ணா, தம்பி என்று அனைவரும் இசையில், கலைகளில் புலமை கொண்டவர்கள். எனவே, நானும் சிறுவயதிலிருந்தே இசையில் தேர்ச்சி பெற்று வந்தேன்.இசை மேற்படிப்புக் காக இந்தியா வந்த போது, நித்யஸ்ரீ மகாதேவன் அம்மா லலிதா சிவகுமாரிடம் இசை கற்றுக் கொண்டேன். மேலும், தமிழகத்தில் பல இசைக் கலைஞர்களிடம் இசை நுணுக்கங்களைக் கற்றேன். பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், கோயம்புத்துார் பாரதிய வித்யா பவன் என, மியூசிக் கோர்ஸ்களில், கோல்டு மெடலிஸ்ட்டாகத் தேர்வு பெற்றேன். கனடாவில் பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, கலையைக் கற்றுக் கொடுக்க நிறைய முக்கியத்துவம் கொடுக்கின்றனர். நான், 17 ஆண்டு களாக கனடாவில் இசைப் பள்ளி நடத்தி வருவது, இம்மக்களின் அந்த ஆர்வத்தால் தான் சாத்தியமாகியிருக்கிறது.கனடாவுக்கு குடிபெயர்ந்ததும், 17 ஆண்டுகளுக்கு முன், 'ஸாமகானம்' எனும் கலை பீடத்தை ஆரம்பித்தேன். அதில், வாய்ப்பாட்டு மற்றும் வீணை கற்பித்து வருகிறேன். என் மாணவர்கள் மேடை நிகழ்ச்சிகள் மட்டு மல்லாது, கோவில் திருவிழாக்கள், முதியோர் அமைப்புகள் போன்ற இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி, கலாசார வளர்ச்சியில் பங்காற்றி வருகின்றனர்.நான் இசைஅமைத்து, எழுதிய தனியிசைப் பாடல்கள் முயற்சி, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவற்றை என் மகள் சுபிகா மனோகாந்தனுடன் பாடி வெளியிட்டு உள்ளேன்.கலை, கலாசார, சமூக, பண்பாட்டு வளர்ச்சியுடன் இயல்பாக இணைந்து நிற்பது இசை. இசையுடன் கூடவே இருப்பது மொழி. எனவே, இசைக்குள் மொழி இருக்கும்போது, ஒன்றால் மற்றொன்று பரஸ்பரம் வளர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக, புலம் பெயர்ந்த தமிழர்களின் வீடுகளில் தாய்மொழியே பேச்சுமொழி. அது இசையுடன் வளர்வது இன்னும் சிறப்பு.கனடா ஒரு கூட்டுக் கலாசார நாடாக இருப்பதால், இங்குள்ள அரசும், நம் தாய்நாட்டுக் கலை, மொழி, கலாசாரம், பண்பாடுகளை வளர்க்க, ஆதரவு தந்து அழகு பார்க்கிறது.வரப்புயர நீர் உயரும் என்பதைப் போல, இங்கு கலை, கலாசாரம், மொழி அனைத்தும் ஒன்றோடு ஒன்று கூட்டு சேர்ந்து வளர்ந்து வருகிறது. இசைக்குள் மொழி இருக்கும்போது, பரஸ்பரம் வளர்ந்து கொண்டே இருக்கும்!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஏப்-202116:49:25 IST Report Abuse
Endrum Indian WOW ஸ்ரீலங்கா பூர்வீகம் ஆனால் கனடாவில்??? தமிழ் இசை??? OMG நம்ம எம் ஜி ஆர் மாதிரி அச்சு அசலாக
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
07-ஏப்-202115:14:02 IST Report Abuse
Rasheel பாராட்டுக்கள். இலங்கை தமிழர்கள் தங்கள் தமிழையும் கலாச்சாரத்தையும் பாரதி சொன்னது போல திசை தோறும் கொண்டு சேர்ப்பவர்கள். வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07-ஏப்-202105:40:24 IST Report Abuse
J.V. Iyer இசைக்குயில் சாருமதி மனோகாந்தனுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X