திரிணமுல் பிரமுகர் வீட்டில் ஓட்டுப்பதிவு இயந்திரம்| Dinamalar

திரிணமுல் பிரமுகர் வீட்டில் ஓட்டுப்பதிவு இயந்திரம்

Added : ஏப் 06, 2021
Share
கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கு முந்தைய தினம் இரவு, நான்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுடன், திரிணமுல் காங்., பிரமுகர் வீட்டில் தங்கிய தேர்தல் அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம், 27ல் துவங்கி, இம்மாதம், 29 வரை, எட்டு

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், மூன்றாம் கட்ட தேர்தலுக்கு முந்தைய தினம் இரவு, நான்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுடன், திரிணமுல் காங்., பிரமுகர் வீட்டில் தங்கிய தேர்தல் அதிகாரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபை தேர்தல், கடந்த மாதம், 27ல் துவங்கி, இம்மாதம், 29 வரை, எட்டு கட்டங்களாக நடக்கிறது. இதில், 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது.

ஹவுராவில் உள்ள, உலுபேரியா உத்தர் என்ற இடத்தில் உள்ள ஓட்டுச் சாவடியில், தபன் சர்க்கார் என்பவர் தேர்தல் அதிகாரி யாக நியமிக்கப்பட்டார். நான்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றுடன், நேற்று முன்தினம் இரவு, உலுபேரியா வந்தார்.ஓட்டு இயந்திரங்களை ஓட்டுச்சாவடிக்கு எடுத்து செல்லாமல், தன் உறவினரும், திரிணமுல் காங்., பிரமுகருமான கவுதம் கோஷ் என்பவரது வீட்டுக்குச் சென்று, இரவு விருந்து சாப்பிட்டார்.

பின், மின்னணு ஓட்டுப் இயந்திரங்களுடன் அங்கேயே துாங்கிவிட்டார். காலையில் எழுந்து இயந்திரங்களுடன் ஓட்டுச் சாவடிக்கு சென்றுள்ளார்.இந்த விவகாரம் வெளியில் கசிந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட தேர்தல் அதிகாரி தபன் சர்க்கார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.பணியில் கவனக்குறைவாக இருந்த போலீஸ், எஸ்.ஐ., சுதீப் சக்கரவர்த்தியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

அதிகாரி தபன் சர்க்காரிடம் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நேற்றைய ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படவில்லை. ''ஓட்டு இயந்திரங்களை வைக்க வேண்டிய, அரசு அலுவலக கட்டடத்தில், மத்திய போலீஸ் படையினர் தங்கியிருந்ததால், அதை என்னுடனேயே எடுத்துச் சென்றேன்,'' என, தபன் சர்க்கார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X