பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பில் அடுத்த 4 வாரங்களுக்கு கவனம்

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : 'கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், அடுத்த நான்கு வாரங்களுக்கு மிகவும் கவனம் தேவை. விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் கூடாது; தடுப்பூசி பாதுகாப்பானது. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. நம் நாட்டில், கொரோனா தொற்று இரண்டாவது அலை, வேகமாக பரவுகிறது; இது, மத்திய - மாநில அரசுகளையும், மக்களையும்
 கொரோனா தடுப்பில் அடுத்த 4 வாரங்களுக்கு.. கவனம் !  அலட்சியம் வேண்டாம் என அரசு எச்சரிக்கை

புதுடில்லி : 'கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், அடுத்த நான்கு வாரங்களுக்கு மிகவும் கவனம் தேவை. விதிமுறைகளை பின்பற்றுவதில் அலட்சியம் கூடாது; தடுப்பூசி பாதுகாப்பானது. தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.


நம் நாட்டில், கொரோனா தொற்று இரண்டாவது அலை, வேகமாக பரவுகிறது; இது, மத்திய - மாநில அரசுகளையும், மக்களையும் பெரிதும் கவலைஅடையச் செய்துள்ளது.
மஹாராஷ்டிரா, பஞ்சாப், டில்லி, கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. இந்த மாநிலங்களில், பல நகரங்களில், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண், 'நிடி ஆயோக்' உறுப்பினர் வினோத் பால் உள்ளிட்டோர், நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினர்.

இதன்பின், அவர்கள் கூறியதாவது:கொரோனா இரண்டாவது அலையின் பரவல் அதிகரித்துள்ளது, மிகவும் கவலையளிக்கிறது. தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில், மக்கள் அலட்சியம் காட்டுவது தான், இதற்கு முக்கிய காரணம்.கடந்த ஆண்டு இதே காலத்தில், கொரோனா பரவல் அதிகரித்ததை விட, இப்போது வேகமாக அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில், அடுத்த நான்கு வாரங்கள், நமக்கு மிகவும் இக்கட்டான காலகட்டம். மக்கள் மிகவும் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.

முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டமாக கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட தொற்று தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். சிறிய அலட்சியம் கூட, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். கொரோனா தடுப்பூசி, மிகவும் பாதுகாப்பானது. தகுதியுள்ள அனைவரும், சிறிதும் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் நிலைமை கவலையளிக்கின்றன. இம்மாநிலங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.போதுமான எண்ணிக்கையில், கொரோனா பரிசோதனை மையங்களை ஏற்படுத்தவும், அவற்றை எளிதாக மக்கள் பயன்படுத்த, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், அம்மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிலைமை கைமீறுவதை தடுக்க, தடுப்பூசி போடுவதை பரவலாக்குவதையும், விதிமுறைகளை கட்டாயமாக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தகுதியானோருக்கு முன்னுரிமை



மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் கூறியதாவது:தடுப்பூசி போடுவதை, அனைவருக்கும் கட்டாயமாக்க வேண்டும் என, பலர் கூறுகின்றனர். உயிர்இழப்பை தடுப்பதும், சுகாதாரப் பணியாளர்களை காப்பாற்றுவதும் தான் முக்கியம். விரும்புகிறவர்களுக்கு போட வேண்டும் என்பதை விட, தேவையானவர்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என்பதே, அரசின் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.


அரசு ஊழியர்களுக்கு உத்தரவு



பிரதமர் அலுவலகம் உட்பட அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும், பணியாளர் குறைகேட்பு மற்றும் ஓய்வூதிய துறையின் துணைச் செயலர் உமேஷ்குமார் பாட்டியா எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவலின் தீவிரம் குறித்து, மத்திய அரசு, கூர்ந்து கவனித்து, அதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இப்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடக்கின்றன. அதனால், 45 வயதுக்கு மேற்பட்ட, மத்திய அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என அனைவரும், அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்வதை, அமைச்சகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-ஏப்-202108:19:13 IST Report Abuse
ஆப்பு பரப்புரை செய்யறோம்னு வந்து கொரோனா பரப்புனது நாங்களே... இப்போ எச்சரிப்பதும் நாங்களே... மத்திய அரசு..
Rate this:
visu - Pondicherry,இந்தியா
07-ஏப்-202117:50:24 IST Report Abuse
visuஆமாம் மத்திய அரசு மட்டும்தான் தேர்தலில் போட்டியிட்டது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X