தோல்வியை உணர்ந்துள்ளார் மம்தா: பிரதமர் மோடி திட்டவட்டம்

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கூச் பெஹார்:''மேற்கு வங்கத்தில், முஸ்லிம்கள் ஓட்டுகள் கைநழுவிப் போவதை, முதல்வர் மம்தா பானர்ஜி உணர்ந்துள்ளார்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் உள்ள கூச் பெஹாரில், நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:முஸ்லிம்கள் அனைவரும்
தோல்வி,உணர்ந்துள்ளார் மம்தா: பிரதமர்  மோடி திட்டவட்டம்

கூச் பெஹார்:''மேற்கு வங்கத்தில், முஸ்லிம்கள் ஓட்டுகள் கைநழுவிப் போவதை, முதல்வர் மம்தா பானர்ஜி உணர்ந்துள்ளார்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் உள்ள கூச் பெஹாரில், நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரிணமுல் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும் என, மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

முஸ்லிம்கள் ஓட்டு, கை நழுவிப் போவதை, அவர் உணர்ந்துள்ளார். இதே கோரிக்கையை, ஹிந்துக்களிடம், பா.ஜ., வைத்தால், கடுமையான விமர்சனங்கள் எழும். தேர்தல் கமிஷன் எங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியிருக்கும்.காசு பெற்றுக் கொண்டு, பா.ஜ., கூட்டத்துக்கு மக்கள் வருவதாக கூறி, மேற்கு வங்க மக்களின் சுயமரியாதையை, மம்தா இழிவுபடுத்தி உள்ளார்.

முதல்வர் பதவியில் இருந்து மம்தா வெளியேற்றப்பட போகிறார் என்பது, இரண்டு கட்ட ஓட்டுப்பதிவுக்கு பின் உறுதியாக தெரிகிறது. இதை மம்தாவும் நன்கு உணர்ந்துள்ளார். எனவே தான், ஆத்திரத்தில் எல்லோரையும், எல்லாவற்றையும் கடுமையாக விமர்சிக்கிறார்.வரும், 2024 லோக்சபா தேர்தலில், என் சொந்த தொகுதியான வாரணாசியில், என்னை எதிர்த்து மம்தா போட்டியிடப் போவதாக, அவரது கட்சி தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தா, தன் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார் என்பது இதன் வாயிலாகவே உறுதியாகிறது. மேற்கு வங்கத்துக்கு வெளியே, தனக்கு இப்போதே இடம் தேடத் துவங்கிவிட்டார்.இவ்வாறு அவர் பேசினார்.


அரசுக்கு எதிராக சதி!

பா.ஜ.,வின், 41வது நிறுவன நாளன்று, டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டம், தொழிலாளர் சட்டம் போன்றவை பற்றி, மக்கள் மத்தியில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இந்த விவகாரங்களில், பா.ஜ., அரசு மீது வெறுப்புணர்வை துாண்டி, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை குலைக்க, சிலர் சதி செய்கின்றனர். பா.ஜ., தலைவர்கள் மக்களை சந்தித்து, இது குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-202100:05:53 IST Report Abuse
Pugazh V இவரு இங்கே மம்தா தோல்வி யை உணர்ந்து ள்ளார் ங்கறார். அங்கே அமி ஷ 200 இடங்களில் வெற்றி ங்கறார். என்ன நடக்கிறது என்று புரிகிறதா?? ம்ம் அத்து
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-202100:04:25 IST Report Abuse
Pugazh V sankaseshan - mumbai கொஞ்சம் நாகரிகம் கற்று கொள்ளவும். ஒரு பிரதமர் பேசுகிற பேச்சா இவர் பேசுவது? நாலாந்தர அரசியல் வாதி மாதிரி பேசி பிரதமர் பதவியின் ப்ரோடோகாலை மதிக்காமல் அந்த பதவியை இழிவு படுத்துவது உங்களுக்கு த் தெரியாது. ஏன்னா உங்கள் டிசைன் அப்படி. ரஜினி யைப் பார்த்து தலைவா என்று கதறியவராச்சே வாக்கு மெஷின் ஸெட்டப் பண்ணலைன்னு நீர் பார்த்தீரா?
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
07-ஏப்-202118:12:33 IST Report Abuse
Elango மோடி ஓட்டு இயந்திரத்தின் தன்மையை நன்றாக உணர்ந்து வைத்துள்ளார்...இப்படி கேவலமான முறையில் ஆட்சியை பிடித்து ஆள நினைக்கும் சர்வாதிகாரிகள் தான் இந்தியாவை முன்னேற பாதைக்கு கொண்டு செல்ல போகிறார்களா நாட்டை விற்று விட போகிறார்கள்...இவர்களை அழிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X