'ரபேல்' ஒப்பந்தத்தில் ஊழல்:ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 06, 2021 | கருத்துகள் (30+ 7)
Share
Advertisement
புதுடில்லி :'ரபேல்' போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, மத்திய அரசின் மீது, காங்., முன்னாள் தலைவர் ராகுல், மீண்டும் குற்றஞ்சாட்டிஉள்ளார்.ஐரோப்பிய நாடான பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும், ரபேல் ரக போர் விமானங்கள் வாங்கு வதற்கு, 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதில் ஊழல் நடந்துள்ள தாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தொடர்ந்து
'ரபேல்' ஒப்பந்தம், ஊழல்:ராகுல் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடில்லி :'ரபேல்' போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக, மத்திய அரசின் மீது, காங்., முன்னாள் தலைவர் ராகுல், மீண்டும் குற்றஞ்சாட்டிஉள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்சின், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் தயாரிக்கும், ரபேல் ரக போர் விமானங்கள் வாங்கு வதற்கு, 2016ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதில் ஊழல் நடந்துள்ள தாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இது தொடர்பான வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும், சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கையிலும், 'முறைகேடு ஏதும் நடக்கவில்லை' எனக் கூறப்பட்டது.

கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, இதையே முக்கியப் பிரச்னையாக வைத்து, காங்., பிரசாரம் செய்தது. ஆனால், தேர்தலில் படுதோல்வி அடைந்தது.இந்நிலையில், டசால்ட் ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவைச் சேர்ந்த, இடைத்தரகரான சுஷேன் குப்தாவுக்கு, 4.32 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த நாட்டின் லஞ்ச தடுப்பு பிரிவு நடத்திய சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாக, ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து, ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்., கூறி வருகிறது. ஆனால், 'எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, மத்திய அரசு கூறியுள்ளது.இது குறித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ராகுல் கூறியுள்ளதாவது:கர்மா என்பது ஒருவரது செய்கைகளின் தொகுப்பு; அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, 'இடைத் தரகருக்கு பணம் கைமாறியுள்ளது தெரியவந்துள்ளது. அதனால், ரபேல் ஒப்பந்தம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்'

என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-202100:09:14 IST Report Abuse
Pugazh V திமுக மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஊழல் லஞ்சம் நில அபகரிப்பு என்று கதறிய கூட்டம் இப்போது ஆதாரம் இருக்கா என்று கேட்பது விந்தை. ஆங்கில ஊடகங்கள் படிக்கவும். அவற்றில், "இந்திய ஏஜன்ட் ஒருவருக்கு கோடிகளில் லஞ்சம் கொடுத்ததாக ரஃபேல் விமான கம்பெனி சொல்லி யது பற்றிய செய்தி வந்திருக்கிறது.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
07-ஏப்-202119:47:14 IST Report Abuse
sahayadhas இப்ப ராகுல் உளருகிறார் 10 ஆண்டில் எல்லாரும் உளருவீர்கள்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
07-ஏப்-202116:39:32 IST Report Abuse
Endrum Indian கர்மா என்பது ஒருவரது செய்கைகளின் தொகுப்பு அதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது???அருமையான வாக்கியம் ஆகவே ரவுல் வின்சி என்னும் ராகுல் காந்தி என்னும் பப்பூவே உனது கர்மா வினையை கருமம் நாங்க அனுபவிக்கிறோம்??/
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X