அரசியல் செய்தி

தமிழ்நாடு

அவதூறு பரப்பியவர் மீது காங்., வேட்பாளர் புகார்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி காங்., வேட்பாளர் மணிரத்தினம், கள்ளக்குறிச்சி தி.மு.க., மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரை பற்றி அவதுாறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் மணிரத்தினம், நேற்று கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர்
அவதூறு பரப்பியவர் மீது காங்., வேட்பாளர் புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி (தனி) தொகுதி காங்., வேட்பாளர் மணிரத்தினம், கள்ளக்குறிச்சி தி.மு.க., மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரை பற்றி அவதுாறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி (தனி) சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் மணிரத்தினம், நேற்று கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறேன். தி.மு.க., வழக்கறிஞர் கல்லை தெற்கு என்ற 'வாட்ஸ் ஆப்' குழுவிற்கு நான் பேசியது போல 'வாய்ஸ் மெசேஜ்' சித்தரித்து வந்துள்ளது.

அதில், தி.மு.க.,வை சேர்ந்த ராஜாமணி என்பவர், உங்க மாவட்ட செயலாளர் தான் இந்த வேலை செய்துள்ளார். அமவுண்ட் கொடுத்துட்டீங்களா, எல்லா அமவுண்ட்டும் கொடுத்துட்டீங்களா என்று கேட்க, 18 கோடி ரூபாய் கொடுத்தாயிற்று, அதை ஏமாற்றிவிட்டார், ஓட்டுக்காக ரூ.500 லஞ்சம் கேட்டும் பேசியது போல உள்ளது.

அதாவது, தற்போதைய கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., வேட்பாளருமான வசந்தம் கார்த்திகேயன், 18 கோடி ரூபாய் தொகையை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. இது, வசந்தம் கார்த்திகேயனின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், அவரது வெற்றி வாய்ப்பினை தடுக்கும் எண்ணத்தில் சிலர் அவதுாறு பரப்பி வருகின்றனர்.

இதை மேற்கொண்டு பரப்பாமல் தடுப்பதுடன், அவதுாறு பரப்பியவர் மீதும், ஓட்டுக்கு 500 லஞ்சம் கேட்டவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பொய்யான தகவலை கூறியவர் காட்டுமன்னார்கோவில், வீரகனுாரைச்சேர்ந்த ரவீந்தராஜ் என்பது விசாரித்ததில் தெரிகிறது. இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் சுப்ராயலு ஆகியோர் உடனிருந்தார்.புகார் மனுவை இன்ஸ்பெக்டர் முருகேசன், மணிரத்தினம் சிகிச்சை பெற்றுவரும் தனியார் மருத்துவமனைக்கு சென்று பெற்றுக்கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X