பொது செய்தி

இந்தியா

முக்கிய பதவியில் தருண் பஜாஜ்,அஜய் சேத் நியமனம்

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
புதுடில்லி:மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ், வருவாய் துறை செயலராகவும், பெங்களுரு ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர், அஜய் சேத், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.மத்திய அரசு பதவிகளில் முக்கிய நியமனங்களுக்கு, மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, புதிய நியமனம் தொடர்பான
 முக்கிய பதவியில்  தருண் பஜாஜ்,அஜய் சேத் நியமனம்

புதுடில்லி:மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ், வருவாய் துறை செயலராகவும், பெங்களுரு ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனர், அஜய் சேத், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலராகவும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

மத்திய அரசு பதவிகளில் முக்கிய நியமனங்களுக்கு, மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, புதிய நியமனம் தொடர்பான அறிவிக்கையை, மத்திய பணியாளர் நல அமைச்சகம்வெளியிட்டது. இதன்படி, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் தருண் பஜாஜ், வருவாய் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து, பெங்களூரு ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக உள்ள அஜய் சேத், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹரியானா பிரிவு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான தருண் பஜாஜ், பிரதமர் அலுவலகத்தில், 2015 - 20 ஏப்., 29 வரை, முக்கிய பொறுப்பு வகித்தவர். இவர், 2020 ஏப்., 30ல், பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக நியமிக்கப்பட்டார். பிரதமர் மோடி அறிவித்த, தற்சார்பு இந்தியா திட்டத்தை உருவாக்கியதிலும், நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தயாரிப்பிலும், இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.கர்நாடகா பிரிவு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அஜய் சேத், ஆசிய வளர்ச்சி வங்கியில் ஆலோசகராக பணியாற்றியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X