காவலாளி கொடூர கொலை மனைவியிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காவலாளி கொடூர கொலை மனைவியிடம் விசாரணை

Added : ஏப் 06, 2021
Share
ஆம்பூர்:காவலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து, அவரது மனைவி உள்ளிட்ட, 15 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பத்தைச் சேர்ந்தவர், கோவிந்தராஜ், 50; அங்குள்ள ஓட்டலில், இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்யாணி, 45; ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.குடும்ப பிரச்னையால், கணவரை பிரிந்த கல்யாணி, ஏழு

ஆம்பூர்:காவலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து, அவரது மனைவி உள்ளிட்ட, 15 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கென்னடிகுப்பத்தைச் சேர்ந்தவர், கோவிந்தராஜ், 50; அங்குள்ள ஓட்டலில், இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்யாணி, 45; ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.குடும்ப பிரச்னையால், கணவரை பிரிந்த கல்யாணி, ஏழு ஆண்டுகளாக, குழந்தைகளோடு வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் வசிக்கிறார்.

மனைவியை பார்க்க அடிக்கடி வந்து சென்ற கோவிந்தராஜ், ஒரு கட்டத்தில் அங்கேயே தங்கி விட்டார். நேற்று முன்தினம், தன் உறவினர்களுக்கு போன் செய்த கல்யாணி, தன் கணவர் குடிபோதையில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார். உறவினர்கள், இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் மாலை போட வந்தபோது, கோவிந்தராஜ் முகம் வெளியே தெரியாதபடி, 'பேக்' செய்யப்பட்டிருந்தது. மேலும், உடலை குளிப்பாட்ட வெளியே எடுத்தபோது, அவரது தலை நசுங்கி, கைகள் பின்பக்கம் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.

இதனால், ஆம்பூர் போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். விசாரணையில், கோவிந்தராஜ் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதும், போலீசாருக்கு தெரியாமல், சடலத்தை எரிக்க முயன்றதும் தெரிந்தது. கல்யாணி உள்ளிட்ட, 15 பேரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X