அரசியல் செய்தி

தமிழ்நாடு

முக கவசத்தில் உதயசூரியன் 'மாஜி'க்கு அனுமதி மறுப்பு

Added : ஏப் 06, 2021
Share
Advertisement
ஈரோடு:உதயசூரியன் சின்னத்துடன் கூடிய முக கவசம் அணிந்து வந்த, மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளர், சுப்புலட்சுமி ஜெகதீசன் முக கவசத்தை அகற்றிய பிறகே, ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்.ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார்.அனுமதிக்க முடியாதுஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்
 முக கவசத்தில் உதயசூரியன் 'மாஜி'க்கு அனுமதி மறுப்பு

ஈரோடு:உதயசூரியன் சின்னத்துடன் கூடிய முக கவசம் அணிந்து வந்த, மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளர், சுப்புலட்சுமி ஜெகதீசன் முக கவசத்தை அகற்றிய பிறகே, ஓட்டு போட அனுமதிக்கப்பட்டார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார்.அனுமதிக்க முடியாதுஈரோடு, மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடிக்கு, ஓட்டு போட வந்தார்.

அவர், வெள்ளை நிற முக கவசம் அணிந்திருந்தார். அதில் உதயசூரியன் சின்னத்துடன், '2021 வெல்லும் தி.மு.க.,' என, எழுதப்பட்டிருந்தது.ஓட்டுச்சாவடி அருகே வந்தபோது, அவரை ஒரு எஸ்.ஐ., தடுத்து, 'கட்சி சின்ன முக கவசத்துடன் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது' என்றார். அத்துடன் ஓட்டுச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த, நீல நிற துணி முக கவசத்தை வழங்கினார். அதை அணிந்து, சுப்புலட்சுமி ஓட்டு போட்டு சென்றார்.

ஓட்டுச்சாவடி மையத்துக்குள் கட்சிக் கொடி, சின்னம் போன்றவற்றை எடுத்து செல்லக்கூடாது. இது சாமானிய மக்களுக்கே தெரியும். ஆனால், எம்.எல்.ஏ., - எம்.பி., - அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மறந்து விட்டது, பிற வாக்காளர்களை ஆச்சர்யப்பட வைத்தது.


எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட, ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில், தி.மு.க., வேட்பாளர் முருகன் பெயர் எழுதப் பட்ட, 20க்கும் மேற்பட்ட டேபிள், பெஞ்ச்கள் இருந்தன.இவை, தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் அமர்ந்து பணியாற்ற பயன்படுத்தப்பட்டன. இதற்கு மாற்றுக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, டேபிளில் எழுதப்பட்டிருந்த, தி.மு.க., வேட்பாளர் முருகன் பெயரை, பேப்பர் ஒட்டி மறைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X